உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பாதிப்பு அச்சம் உச்சத்தில் உள்ளது. கரோனா வைரசால் 180-க்கும் மேற்பட்ட நாடுகளில் இரண்டு லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் எட்டாயிரத்திற்கும் அதிகமாக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதில் இந்தியாவில் மூன்று பேர் உயிரிழந்தும், 169 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கரோனா வைரஸ் காரணமாக மக்களிடையே மிகப்பெரிய அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கரோனா வைரசைக் கட்டுப்படுத்துவதற்கு பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்டக் கூட்டம் கூடி ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பிரதமர் அலுவலகம் சார்பாக வெளியான ட்விட்டர் பதிவில், ''கோவிட் 19 பாதிப்புகளைக் கட்டுப்படுத்த பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் உயர்மட்ட அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. தனிநபர்கள், உள்ளூர் சமூக செயற்பாட்டாளர்கள், தன்னார்வ அமைப்புகள் ஆகியவை கோவிட் 19ஐ எதிர்கொள்வதற்கான வழிகளை வேகமாகக் கண்டறிய தீவிரம் காட்டுமாறு பேசியுள்ளார்.