கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் உள்ள விமான நிலையங்களுக்கு 300 கோடி அமெரிக்க டாலர் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இது குறித்து விமான நிலைய கவுன்சில் இன்டர்நேஷனல் (ஏசிஐ) தரப்பில் வெளியிடப்பட்டுள்ள விளக்கத்தில் “ கொரோனா வைரஸ் தாக்குதலால் ஆசிய-பசிபிக் நாடுகள் அதிக பாதிப்பை சந்தித்துவருகின்றன.
கொரோனா (கொவிட்-19) வைரஸ் இல்லாமல் திட்டமிடப்பட்ட போக்குவரத்து நிலைகளுடன் ஒப்பிடும்போது, நடப்பாண்டின் முதல் காலாண்டில் பயணிகளின் போக்குவரத்து அளவு 24 விழுக்காடு குறைந்துள்ளது.
வருவாயை பொறுத்தமட்டில் முதல் காலாண்டில் 12.4 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிடப்பட்டிருந்தது. இதற்கிடையில், மத்திய கிழக்கில் பல நாடுகளில் கொரோனா வைரஸ் வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது.
இதனால் பயணிகளின் போக்குவரத்து பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இது எதிர்வரும் நாள்களில் கணிசமாக 4.2 விழுக்காடு எதிர்மறையாக பாதிக்கும் என்று எதிர்பார்க்கிறது. இதே நிலை தொடர்ந்தால் மேலும் அதிகரிக்கலாம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏ.சி.ஐ என்பது விமான நிலையங்களின் குழுவாகும். 176 நாடுகளில் 1,979 விமான நிலையங்களை இயக்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:மிரட்டும் கொரோனா: தள்ளாடும் உலகப் பொருளாதாரம்