தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கொரோனா: ஏழாம் வகுப்பு வரை பொதுத்தேர்வு ரத்து - kerala at high alert due to corona

திருவனந்தரபுரம்: கொரோனா வைரஸ் அச்சத்தால் ஏழாம் வகுப்பு வரை பொதுத்தேர்வை ரத்துசெய்தது மட்டுமின்றி எந்தவொரு வகுப்பையும் நடத்தக்கூடாது என கேரள அரசு உத்தரவிடப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

By

Published : Mar 10, 2020, 1:35 PM IST

கேரளாவில் கொரோனா வைரஸ் திடீரென்று அதிகளவில் பரவ தொடங்கியுள்ளது. இதுவரை 12 பேருக்கு கொரோனா வைரஸ் தோற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால், கேரள மாநிலம் முழு உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், ஏழாம் வகுப்பு வரை மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்துசெய்யப்படுவது மட்டுமின்றி எந்தவொரு வகுப்பையும் நடத்தக் கூடாது என முடிவுசெய்யப்பட்டு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

மேலும், பொது நிகழ்ச்சிகள் எதுவும் கொரோனா வைரஸ் தாக்கம் குறையும் வரை நடத்தக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால், எட்டு முதல் பத்தாம் வகுப்பு மாணவர்களின் தேர்வு நாளில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:கேரளாவில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் 2 வயது குழந்தை!

ABOUT THE AUTHOR

...view details