ஜம்மு காஷ்மீரின் பெரிய நகரமான ஸ்ரீநகரில் கரோனா தொற்று காரணமாக இருந்த ஊரடங்கு கட்டுப்பாடுகளில் சிலவற்றை முக்கிய வசதிக்காக தளர்த்தியுள்ளதாக நேற்று (மே 27) அதிகாரப்பூர்வமாக அரசு அலுவலக செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:
கரோனா தொற்றால் சிவப்பு மண்டலமாக இருந்த பகுதிகள் குறித்து விரிவாக ஆய்வுசெய்யப்பட்டது. அதில் தகுதியான 13 கட்டுப்பாட்டுப் பகுதிகளில் நிர்ணயிக்கப்பட்ட வழிகாட்டுதல்களின் பேரில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன.
இதுபோன்று தளர்வுகள் அளிக்கப்பட்ட பகுதிகளில் கரோனா தொற்று பாதிப்பு மறுபடியும் ஏற்பட்டால் மீண்டும் அதனைச் சிவப்பு மண்டலமாக அறிவிக்க முடியும். தற்போதுவரை ஸ்ரீநகரில் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்குச் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.