தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கொரோனாவுக்கு இடையிலும் இலங்கையில் தேர்தல் பணிகள் தீவிரம்

கொழும்பு: இலங்கையில் இருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இலங்கையில் தேர்தல் பணிகள் எந்த வித சுணக்கமும் இன்றி தொடர்ந்து நடைபெறுகிறது.

Sri lanka
Sri lanka

By

Published : Mar 13, 2020, 4:48 PM IST

இலங்கையில் அண்மையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில் அங்கு நாடாளுமன்றம் தற்போது கலைக்கப்பட்டுள்ளது. வரும் ஏப்ரல் 25ஆம் தேதி அங்கு தேர்தல் நடைபெறும் என இலங்கை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தற்போது உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெறும் நிலையில் இலங்கையிலும் இருவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகியுள்ளது. இந்நிலையில் அங்கு தேர்தல் பணிகள் தொடர்ச்சியாக நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதையடுத்து அதற்குப் பதிலளித்துள்ள அந்நாட்டுத் தேர்தல் ஆணையம், தற்போது இலங்கையில் நிலைமை சீராகவே உள்ளது எனவும், திட்டமிட்டப்படி தேர்தல் பணிகள் நடைபெற்றுவருகின்றன எனவும் விளக்கமளித்துள்ளது.

மேலும் தேர்தலை ஒத்திவைக்கும் அதிகாரம் அதிபருக்கு மட்டுமே உள்ளது எனவும்; தேவை ஏற்படும்பட்சத்தில் அதற்கான அறிவிப்பானது அவரிடமிருந்தே வரும் எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க:ஃபரூக் அப்துல்லா வீட்டுக் காவலில் இருந்து விடுவிப்பு

ABOUT THE AUTHOR

...view details