உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் 83 பேரைத் தாக்கியுள்ளது. அவர்களில், 68 பேர் இந்தியர்கள். மீதமுள்ள 17 பேரில் 16 பேர் இத்தாலியர்கள். ஒருவர் கனடா நாட்டைச் சேர்ந்தவர். இதுதொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த சுகாதார அமைச்சகத்தின் இணைச் செயலாளர் லாவ் அகர்வால் கூறுகையில், “ஜப்பானில் இருந்து வெளியேற்றப்பட்ட 124 பேரும், சீனாவிலிருந்து வெளியேற்றப்பட்ட 112 பேருக்கும் கொரோனா பாதிப்பு இல்லையென்பதால் இன்று விடுவிக்கப்படுகின்றனர்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் ஒரு "சுகாதார அவசரநிலை" அல்ல. ஆகவே பொதுமக்கள் பீதி அடையத் தேவையில்லை. விமான நிலையங்களில் சோதனை அதிகரிக்கப்படும். மார்ச் 14ஆம் தேதி முதல் ஏப்ரல் 15ஆம் தேதி வரை வங்கதேசம் உள்ளிட்ட எல்லை நாடுகளுடனான பேருந்து, ரயில் போக்குவரத்து நிறுத்தப்படுகிறது.