தமிழ்நாடு

tamil nadu

'கொரியா, இத்தாலி, ஈரான் நாடுகளுக்குப் பயணிக்க வேண்டாம்' - அரசு அறிவுறுத்தல்

By

Published : Feb 27, 2020, 7:58 AM IST

டெல்லி : தென்கொரியா, இத்தாலி, ஈரான் ஆகிய நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி வருவதால் அந்நாடுகளுக்குப் பயணிக்க வேண்டாம் என சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

Corona Virus travel advisory, கொரோனா வைரஸ்
Corona Virus

இதுதொடர்பாக இந்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்தியர்கள் சீனா, சிங்கப்பூர், தென்கொரியா, ஈரான், இத்தாலி உள்ளிட்ட நாடுகளுக்கு அவசியமின்றி பயணிக்க வேண்டாம்.

இந்நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டு இந்தியா வரும் அனைத்துப் பயணிகளும் 14 நாட்களுக்குத் தனிமைப்படுத்தப்படுவர்.

சந்தேகம் ஏதுமிருந்தால் +91-11-23978046 என்ற 24 மணி நேர உதவி எண்ணையோ, அல்லது ncov2019@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியையோ தொடர்பு கொள்ளுங்கள்" எனக் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, இதேபோன்ற ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்த சுகாதாரத்துறை சீனா, தாய்லாந்து, மலேசியா ஆகிய நாடுகளுக்குப் பயணிக்க வேண்டாம் என இந்தியர்களை அறிவுறுத்தியிருந்தது.

சீனாவின் வூஹான் நகரில் தொற்றிய கொவிட்-19 (கொரோனா வைரஸ்) தற்போது தென் கொரியா, ஈரான், இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் வேகமாகப் பரவி வருகிறது. டிசம்பர் மாதம் இறுதியில் பரவ ஆரம்பித்து இந்த வைரஸ் காரணமாக உலகளவில் இதுவரை 2800-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இதையும் படிங்க : கொரோனா வைரஸ் - உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதலிலிருந்து ஆறு அணிகள் விலகல்!

ABOUT THE AUTHOR

...view details