தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கொரோனா எதிரொலி - அவசர வழக்குகள் மட்டுமே விசாரிக்கப்படும்! - Bombay high court on Covid 19

மும்பை: கொரோனா வைரஸ் தொற்று அச்சம் காரணமாக அவசர வழக்குகள் மட்டுமே விசாரிக்கப்படும் என்று மும்பை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

Bombay high court on Coronavirus
Bombay high court on Coronavirus

By

Published : Mar 15, 2020, 4:32 AM IST

கோவிட்-19 வைரஸ் தொற்று தற்போது இந்தியாவில் வேகமாகப் பரவிவருகிறது. இந்தியாவில் தற்போது வரை 84 பேருக்கு கோவிட்-19 வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், இருவர் கோவிட்-19 வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

இதேபோல, மகாராஷ்டிரா மாநிலத்தில் 26 பேருக்கு கோவிட்-19 வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக, மக்கள் ஒரே இடத்தில் ஒன்றுகூடுவதைத் தவிர்க்க வேண்டும் என்று சுகாதாரத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், கோவிட்-19 தொற்று பரவல் காரணமாக வரும் 16ஆம் தேதி முதல் மும்பை உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்குகள் மட்டுமே விசாரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு நாக்பூர், அவுரங்காபாத், கோவா ஆகிய இடங்களிலுள்ள மும்பை உயர் நீதிமன்ற பெஞ்சுகளுக்கும் பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கொரோனா அச்சுறுத்தல்: பத்ம விருது விழா ஒத்திவைப்பு

ABOUT THE AUTHOR

...view details