தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

உயிரைக் குடிக்கும் கொரோனாவால் 2,118 பேர் உயிரிழப்பு - சீன அரசு அறிவிப்பு - coronavirus death toll

பெய்ஜிங்: கொரோனா வைரஸ் தாக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,118 ஆக உயர்ந்துள்ளதாகவும், இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 62 ஆயிரத்து 442ஆக அதிகரித்துள்ளது எனவும் சீன அரசு தெரிவித்துள்ளது.

coronavirus
coronavirus

By

Published : Feb 21, 2020, 1:52 PM IST

சீனாவின் வூஹான் நகரத்தில் தோன்றி உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸின் தாக்கம் இன்னும் குறைந்தபாடில்லை. சீனாவில் இந்த வைரஸால் பல்லாயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் வேகமாகப் பரவிவருவதால், நாளுக்கு நாள் உயிரிழப்பின் எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணமே உள்ளது.

இந்நிலையில், கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 ஆயிரத்து 118 ஆக உயர்ந்திருப்பதாக சீன அரசு தெரிவித்துள்ளது. 62,442 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் இன்று ஒரே நாளில் மட்டும் 411 பேருக்கு நோய் பரவியிருப்பதாகச் சீன சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்த வைரஸ் தொற்று காரணமாக வூஹான் நகரம் முற்றிலும் முடங்கியுள்ளது. அந்நாட்டின் விமானப் போக்குவரத்தை பல்வேறு நாடுகள் தற்காலிகமாக தடை விதித்துள்ளன. அந்நாட்டின், பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த நோயைக் கட்டுப்படுத்த சீன அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது.

இதையும் படிங்க:2 ஐடி ஊழியர்களுக்கு எச்1என்1 வைரஸ் - கிளைகளை மூடிய எஸ்.ஏ.பி நிறுவனம்!

ABOUT THE AUTHOR

...view details