2003ஆம் ஆண்டு சீனாவை கலங்கடித்த கொரோனா வைரஸ் மீண்டும் சீனாவை மட்டுமல்லாமல் அமெரிக்கா, இந்தியா, சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளையும் கிறங்கடித்துவருகிறது. சீனாவில் வேகமாகப் பரவிவரும் கரோனா வைரஸுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 80ஆக அதிகரித்துள்ளது. இந்த வைரஸால் சீனாவில் மட்டும் இரண்டாயிரத்து 700க்கும் இந்நோயின் பாதிப்பு இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. அமெரிக்காவில் மூன்று பேர், தாய்லாந்தில் ஏழு பேர், கொரியவில் மூன்று பேர் இந்நோய் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சீனர்கள் பல்வேறு வகை உயிரினங்களை உண்பதே கரோனா வைரஸ் தாக்குதலுக்கான மிக முக்கிய காரணமாகக் கருதப்படும் நிலையில், நாடு முழுவதும் விலங்குகளின் இறைச்சி மட்டுமன்றி கடல் உணவுகளின் விற்பனைக்கும் தடை விதிக்கப்படுவதாக சீன அரசு அறிவித்துள்ளது.
மேலும், கரோனா வைரஸின் பிறப்பிடமாகக் கருதப்படும் வூகான் நகரில் இருந்து மக்கள் நாட்டின் பிற பகுதிகளுக்கு செல்லவும் பிற இடங்களில் இருந்து அந்த நகருக்கு மக்கள் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அந்நகரில் உள்ள ஒரு கோடியே 10 லட்சம் மக்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.