கோவிட்-19 வைரஸ் தொற்றின் தாக்கம் இந்தியாவில் நாளுக்கு நாள் மோசமாகிவருகிறது. வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மத்திய-மாநில அரசுகள் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன.
கரோனா: நாட்டில் உயிர் பலி 10ஆக உயர்வு
12:35 March 24
மும்பை: கோவிட்-19 தொற்று காரணமாக மும்பையைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10ஆக உயர்ந்துள்ளது.
மக்கள் தேவையின்றி வீட்டைவிட்டு வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. பல்வேறு மாநிலங்களிலும் மக்கள் நடமாட்டத்தைக் குறைக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதுவரை இந்தியாவில் 492 பேருக்கு கோவிட்-19 வைரஸ் இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதுவரை 36 பேருக்கு சிகிச்சை நிறைவடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இந்நிலையில், கோவிட்-19 வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு மும்பையில் சிகிச்சைப் பெற்றுவந்த 65 வயது மதிக்கதக்க நபர் தற்போது உயிரிழந்துள்ளார். இவர் சமீபத்தில்தான் ஐக்கிய அமீரகம் சென்றுவந்திருந்தார். இதனால், கோவிட்-19 வைரஸ் தொற்றால் இந்தியாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10ஆக உயர்ந்துள்ளது.
இதையும் படிங்க: கரோனா உறுதி செய்யப்பட்டதால் தமிழக இளைஞர் தற்கொலை?