தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கரோனா பாதிப்பு: வங்கதேசத்தை விஞ்சிய மும்பை!

வங்கதேசத்தைக் காட்டிலும் மும்பையில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Coronavirus count in Mumbai crosses 3,000-mark; 7 more die
Coronavirus count in Mumbai crosses 3,000-mark; 7 more die

By

Published : Apr 21, 2020, 11:02 AM IST

இந்தியாவை அச்சுறுத்திவரும் கரோனா வைரஸால் நாளுக்கு நாள் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுவருகின்றனர். நாட்டில் இதுவரை 18,601 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 3,252 பேர் குணமடைந்துள்ளனர். 590 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், மான்செஸ்டர் ஆஃப் இந்தியா என அழைக்கப்படும் மும்பையில் இதன் தாக்கம் மற்ற நகரங்களைவிடவும் படுமோசமாக உள்ளது. பிரஹன் மும்பை மாநகராட்சி வெளியிட்ட தகவலின்படி, நேற்று ஒரேநாளில் புதிதாக 155 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,090ஆக அதிகரித்துள்ளது. கடந்த நான்கு நாள்களில் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு இத்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் பொதுமக்களிடையே பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது.

அதேசமயம் நேற்று ஒரேநாளில் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் ஆறு பேருக்கு ஏற்கனவே உடல்நலக் கோளாறு இருந்துள்ளது. மேலும் ஒருவர் வயது மூப்பின் காரணமாகவும் இறந்துள்ளார். இதனால், மும்பையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 138ஆக உயர்ந்துள்ளது.

மேலும் நேற்று ஒரேநாளில் 84 கரோனா நோயாளிகள் குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 394ஆக உயர்ந்துள்ளது.

இதற்கிடையே, வங்கதேசத்தைவிடவும் மும்பையில் கரோனாவால் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். வங்கதேசத்தில் இதுவரை 2948 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மும்பையில் 3,090 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க:வீடுகளுக்கே பழங்கள், காய்கறிகள் வரும்: ஸ்விகிக்கு வழிவிட்ட அரசு!

ABOUT THE AUTHOR

...view details