சீனாவின் ஹூபே மாகணத்திலுள்ள வூஹான் நகரில் கடந்தாண்டு இறுதியில் கோவிட்-19 வைரஸ் பரவத்தொடங்கியது. பறவைக் காய்ச்சல், பன்றிக் காய்ச்சலைப் போல அல்லாமல் இந்த கோவிட்-19 எங்கிருந்து, எதன் மூலம் வந்தது என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
இந்த வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தும் அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துவருகின்றன. இந்நிலையில், நாணயங்கள் மூலமும், ரூபாய் தாள்கள் மூலமும் இந்த வைரஸ் பரவ வாய்ப்புள்ளதாக தெரியவந்துள்ளது. பாரத ஸ்டேட் வங்கி 2016ஆம் ஆண்டு வெளியிட்ட ஒரு அறிக்கை மேற்கொள்காட்டிய நிபுணர்கள், ரூபாய் தாள்கள் மூலம் வைரஸ் பரவும் சாத்தியங்களை விளக்கியுள்ளனர்.
அதாவது 2016ஆம் ஆண்டு கர்நாடாகாவில் மக்களிடம் பெறபட்ட ரூ.100, ரூ. 50, ரூ. 20, ரூ.10 தாள்களை பாரத ஸ்டேட் வங்கி ஆராய்ந்தது. அதில் 58 விழுக்காடு தாள்களில் வைரஸ் இருப்பு கண்டுபிடிக்கப்பட்டது. அதேபோல நாணயங்களிலும் வைரஸின் இருப்பு இருக்கும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தக் கூடியமானவரை டிஜிட்டல் பரிவர்த்தணைகளை பயன்படுத்துமாறு, ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியது. “இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகள் நாணயத்தின் மூலமும் தாள்கள் மூலமும் நோய்த்தொற்றுகள் பரவும் அபாயத்தைக் குறைக்க, பாலிமர் மூலம் உருவாக்கப்பட்ட தாள்களுக்கு மாறிவிட்டன. எனவே, இந்தியாவும் அதை பயன்படுத்தலாம்”என்று எஸ்பிஐ வெளியிட்ட அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மார்ச் 31 வரை ரயில்கள் ரத்து!