தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் ஆயுர்வேதம்! - கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸ் தொற்று சீனா மட்டுமின்றி அமெரிக்கா, கனடா, இந்தியா உட்பட பல்வேறு நாடுகளிலும் மிக வேகமாக பரவிவருகிறது. இந்த வைரஸ் தொற்றை ஆயுர்வேத மருந்துகள் மூலம் கட்டுப்படுத்த முடியும்.

CoronaVirus can be controlled by ayurveda
CoronaVirus can be controlled by ayurveda

By

Published : Feb 16, 2020, 11:16 PM IST

Updated : Feb 17, 2020, 12:27 PM IST

இயற்கையாகவே மனித உடலில் நோய் எதிர்ப்பு சக்தி பல்வேறு அடுக்குகளைக் கொண்டிருக்கிறது. தவறான உணவுப் பழக்கம், மன அழுத்தம், தூய்மைக் குறைபாடு போன்ற காரணங்களால் இந்த நோய் எதிர்ப்பு சக்தி பாதிக்கப்படுகிறது. சுகாதாரமற்ற சூழலில் இருந்து புதிதாகத் தோன்றும் நுண்ணுயிரியானது உயிர்களின் செல்களில் பாதிப்பை ஏற்படுத்த முடியும். அவ்வாறு உருவானதுதான் கொரோனா வைரஸ்.

உலகில் 66 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை கொரோனா வைரஸ் தாக்கியுள்ளது. கேரளாவில் மூன்று பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மறு அறிவிப்பு வரும் வரை யாரும் சீனாவுக்குச் செல்ல வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. ஜனவரி 15க்குப் பிறகு சீனாவில் இருந்து வந்தவர்கள் மருத்துவ கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.

கொரோனா வைரஸ் என்றால் என்ன?

மனித உடலில் உள்ள சுவாச அமைப்பு, நூற்றுக்கணக்கான வைரஸ்களுக்கு இடமளிக்கக்கூடியது. இந்த வைரஸ்களால் சளி, குளிர் காய்ச்சல் போன்ற நோய்கள் ஏற்படுவது இயல்பு. விலங்குகளிடமிருந்து பல ஆண்டுகளுக்கு முன்பு மனிதர்களுக்கு பரவிய புதிய வகை வைரஸ் கொரோனா. இந்த வைரஸ் நான்கு வகைகளைக் கொண்டது. அவற்றில் மூன்று மனிதர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவை.

கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் ஆயுர்வேதம் 1

கொரோனா வைரஸின் பாதிப்பு கடுமையானது ஏன்?

சீனாவில் 2002–2003ஆம் ஆண்டிலேயே, SARS எனப்படும் மிகக் கடுமையான சுவாசக் கோளாறால் மக்கள் பாதிக்கப்படுவது தொடங்கியது. அதற்கு 10 ஆண்டுகளுக்குப் பிறகு MERS என்ற வைரஸ் தோன்றியது. இது கொரோனா வைரஸால் ஏற்பட்டது. இந்த இரு தொற்றுநோய்களும் நூற்றுக்கணக்கானோரின் உயிரைக் குடித்தன. இந்த முறை வுஹான் இறைச்சி சந்தையிலிருந்து தோன்றிய கொரோனா வைரஸ் சர்வதேச அளவில் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

கரோனா வைரசுக்கான அறிகுறிகள்:

  • காய்ச்சல்
  • இருமல்
  • மூச்சுத் திணறல்
  • குளிர்
  • நெஞ்சு வலி
  • உடல் வலி
  • தொண்டை வலி
  • உடல்நிலை சரியில்லாமல் இருப்பது போன்ற உணர்வு
  • தலைவலி
  • வயிற்றுப்போக்கு
  • குமட்டல்
  • வாந்தி

இத்துடன் உறுப்பு செயலிழப்பு மற்றும் நுரையீரல் அழற்சி ஆகியவையும் ஏற்படும்

கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் ஆயுர்வேதம் 2

கொரோனா வைரஸை தடுப்பது எப்படி?

  • அடிக்கடி சோப்பு போட்டு கைகளை கழுவ வேண்டும்
  • சுகாதாரமற்ற சூழ்நிலையில் தயாரிக்கப்பட்ட உணவு மற்றும் இறைச்சியை தவிர்க்க வேண்டும்
  • பழங்கள் மற்றும் காய்கறிகளை சுத்தமான தண்ணீரில் கழுவ வேண்டும்
  • மற்றவர்களுடன் பழகும்போது மிக நெருக்கமாக பழகக்கூடாது; கை குலுக்கிக் கொள்ளக் கூடாது
  • N95 போன்ற பாதுகாப்பான முகமூடிகளை பயன்படுத்துவதன் மூலம் மூக்கின் மூலம் வைரஸ் நுழைவதைத் தடுக்க முடியும்
  • கண்கள் மூலமாக வைரஸ் உடலில் நுழைவதைத் தடுக்க மூக்குக் கண்ணாடி அணிந்து கொள்ள வேண்டும்
  • பொது இடங்களில் உள்ள கதவு, கைப்பிடிகள், ஜன்னல் போன்றவற்றை ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை ஆல்கஹால் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்
  • அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும்

இந்த வைரஸ் யாரை அதிகம் பாதிக்கும்?

  • நீரிழிவு நோயாளிகள், நீண்டகால நுரையீரல் பாதிப்பு உள்ளவர்கள். இதய பாதிப்பு உள்ளவர்கள்
  • முதியவர்கள்
  • குழந்தைகள்
  • உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்துக் கொண்டவர்கள் நோயெதிர்ப்பு சக்தியை கட்டுப்படுத்தும் மருந்து உட்கொள்பவர்கள்
  • புற்றுநோய் சிகிச்சை பெறும் நோயாளிகள்.
கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் ஆயுர்வேதம் 3

கொரோனா வைரஸை தடுப்பதற்கான வழிமுறைகள்:

இந்திய பாரம்பரிய மருத்துவ முறையான ஆயுர்வேதத்தில், கொரோனா வைரஸ் போன்ற வைரஸ்கள் ஏற்படுத்தும் நோய் அறிகுறிகள் குறித்து விவரிக்கப்பட்டுள்ளது. புதிய வகை வைரசாக இருந்தாலும் நோய் கிருமிகளுக்கு எதிராக உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மருந்துகள் ஆயுர்வேதத்தில் உள்ளன. வைரஸ்கள் பற்றி போதிய அறிவு இல்லை என்றாலும், பாதிப்புக்குத் தீர்வைத் தரக் கூடிய ஆற்றல் ஆயுர்வேதத்திற்கு உள்ளது.

கொரோனா வைரசில் இருந்து பாதுகாப்பதற்கான மருந்துகள் இங்கே தரப்பட்டுள்ளன. இவை கரோனா வைரஸை தடுப்பதற்கானவை. பல்வேறு வழிமுறைகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றில் மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்ட மருந்தை மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும். சிகிச்சை எடுத்துக்கொள்வதற்கு முன்பு மேலே கூறப்பட்டுள்ள முன்னெச்சரிக்கைகளை கவனத்தில் கொள்ள வேண்டியது முக்கியம். நோயாளிகள் 12 வயதிற்குட்பட்டவர்களாக இருந்தால், அவர்களுக்கு பாதி அளவு மருந்தே போதுமானது.

கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் ஆயுர்வேதம் 4
  • ஷடாங்க பனியம். எடுத்துக்கொள்ள வேண்டிய அளவு: ஒரு நாளைக்கு காலை உணவுக்கு முன் 15 மில்லி அளவு என 10 - 15 நாட்கள் வரை.
  • அகஸ்திய ஹரிதாகி ரசாயன். எடுத்துக்கொள்ள வேண்டிய அளவு: ஒரு நாளைக்கு இருமுறை (உணவுக்கு முன்) 5 கிராம் வீதம் 10 – 15 நாட்கள் முடிய

அல்லது

ஹரித்ராகண்ட். அளவு: 5 கிராம் வீதம் ஒரு நாளைக்கு இருமுறை உணவுக்கு முன்னோ அல்லது பின்னோ 10 – 15 நாட்களுக்கு எடுத்துக்கொள்ள வேண்டும்

கபாகேத்து ரஸ். அளவு: ஒரு நாளைக்கு 200 கிராம் வீதம் 10 – 15 நாட்கள் வரை

சூர்ணத்தை வெதுவெதுப்பான நீரிலோ அல்லது தேனுடன் கலந்தோ உட்கொள்ள வேண்டும்

அல்லது

திரிகடு சூர்ணம் 25 கிராம் + குடுச்சி சத்வா 5 கிராம் + யஷ்டிமது சூர்ணம் 25 கிராம்

இவற்றை நன்கு கலந்து இரண்டு முதல் மூன்று கிராம் வீதம் வெதுவெதுப்பான நீருடனோ அல்லது தேனுடனோ கலந்து தினமும் காலை உணவுக்கு முன் 10 – 15 நாட்களுக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்

கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் ஆயுர்வேதம் 5

கொரோனா வைரஸ் உலகில் வேகமாகப் பரவும் ஒரு புதிய தொற்றுநோய். இந்தியாவில் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. நோயை குணப்படுத்துவதைவிட அது வராமல் தடுத்துக்கொள்வதே சிறந்தது என்ற வகையில், சீனாவில் இருந்து இந்தியாவிற்கு வரும் மக்களிடம் சளி, காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருந்தால் அவர்கள் உடனடியாக ஒரு பொது மருத்துவரை அணுக வேண்டியது அவசியம். இந்த நோயை எதிர்த்துப் போராடும் நோக்கில், சுகாதாரத்தைப் பேணுதல், கொதிக்க வைத்த தண்ணீரைக் குடித்தல், புதிதாக சமைத்த உணவை உண்ணுதல் ஆகியவற்றை கடைபிடிக்க வேண்டும்.

இந்தக் கட்டுரை டாக்டர் பி.வி. ரங்கநாயக்குலு (உடலியல் மருத்துவம், எஸ்.வி. ஆயுர்வேத கல்லூரி, திருப்பதி) உடன் கலந்தாலோசித்து எழுதப்பட்டது.

இதையும் படிங்க: ஜப்பான் கப்பலில் தொடரும் கொரோனா - 355 பேர் பாதிப்பு

Last Updated : Feb 17, 2020, 12:27 PM IST

ABOUT THE AUTHOR

...view details