இது குறித்து அவர் கூறியதாவது, “இன்று புதுச்சேரியில் 57 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இதுபோன்ற பாதிப்புகளை அதிகரிக்க அனுமதித்தால் ஒரு நாளைக்கு 100 நபர்கள் வரை பாதிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. எனவே கரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்கும், தடுப்பதற்கும் ஒன்றிணைந்த செயல்பட்டு உழைக்க வேண்டும்.
அதுபோல தயவுசெய்து அனைவரும் வெளியே செல்லும்போது முகக்கவசம் அணிய வேண்டும், கடைக்குச் செல்லும்போது தகுந்த இடைவெளியுடன் செயல்பட வேண்டும்.
வீட்டிற்குள் நுழைவதற்கு முன் கை, கால்களைச் சுத்தம் செய்துகொண்டு பொது சுகாதாரத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். மேலும் கிருமிநாசினிகளைக் கொண்டு கைகளை அடிக்கடி சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.
தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் பாதுகாப்பை தொழிற்சாலைகள் நிர்வாகத்தினர் உறுதி செய்துகொள்ள வேண்டும். இன்று புதுச்சேரியில் புதிதாக நோய்த்தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 57ஆக உள்ளது. அது நாளை 100 ஆக மாறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்பதை நினைவில் கொள்ளவும். எனவே, தயவுசெய்து மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படுங்கள்” என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க:22 வயது ஆம்புலன்ஸ் உதவியாளர் கரோனாவால் உயிரிழப்பு!