கடந்த 2017ஆம் ஆண்டு சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்ட மறைந்த முன்னாள் முதலமைச்சரின் உதவியாளர் வி.கே. சசிகலா, ஜனவரி 27ஆம் தேதியன்று பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
கரோனா தொற்று காரணமாக 10 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த இவரின் மாதிரிகளை இன்று (ஜன.30) மருத்துவர்கள்மறுபடியும் பரிசோதனை செய்யவுள்ளனர். ஒருவேளை சோதனை முடிவில் கரோனா தொற்று இல்லை என்றால் அவர் வீட்டிற்கு அனுப்பப்படுவார். இல்லையெனில் விக்டோரியா மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெறுவார்.