ஒரு நூற்றாண்டு நுண்ணியிரை மேற்கோள் காட்டி, பில் கேட்ஸால் கவலைக்குள்ளாக்கப்பட்டதைப் போல், கோவிட்-19 உலகெங்கிலும் ஒரு லட்சத்துக்கும் அதிகமாக மக்களைத் தொற்றிக்கொண்டு சமுதாயத்தில் சமூகம், பொருளாதாரத் துறைகளை அழித்துவருகிறது. உலக சுகாதார நிறுவனமானது கொரோனா வைரஸ் பரவுவதைத் கட்டுக்குள் கொண்டுவர முடியும் என்று நம்பினாலும், இந்தியா உள்பட 80 நாடுகள் கடுமையான பிரச்சனைக்குள்ளாகியுள்ளன.
இந்த வைரசின் மையப் பகுதியான சீனாவில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டாலும், ஈரான், இத்தாலி, தென் கொரியா, ஜப்பான் போன்ற நாடுகளில் இறப்பு எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்தக் கொடிய வைரசானது இத்தாலியில் இருந்து 14 நாடுகளுக்கு 24 பாதிக்கப்பட்ட நோயாளிகள் மூலமாகவும், ஈரானிலிருந்து 11 நாடுகளுக்கு 97 பாதிக்கப்பட்ட நோயாளிகள் மூலமாகவும் பரவியுள்ளது.
இந்தியாவில் உறுதி செய்யப்பட்ட 30 நோயாளிகளில், பாதி பேர் இத்தாலிய சுற்றுலாப் பயணிகள் ஆவர். அரசு போர்க்கால அடிப்படையில் அனைத்து மாநிலங்களிலும் ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்புத் திட்டத்தின் மூலம் இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறிவதற்கு 21 விமான நிலையங்கள், 65 துறைமுகங்களுக்கு வரும் வெளிநாட்டு, உள்நாட்டுப் பயணிகளின் ஆரோக்கியத்தை உன்னிப்பாகக் கவனிக்க எடுத்துள்ள நடவடிக்கைகள் தற்போதைய நெருக்கடி நிலைக்கு ஏற்றதாகும்.
இந்தக் கொரோனா வைரஸ் ஆரோக்கியமற்றக் குடிசைப் பகுதிகளிலிருந்து பரவ வாய்ப்புள்ளது என்று மருத்துவ நிபுணர்கள் விடுத்துள்ள எச்சரிக்கையை அடுத்து, தெலங்கானா உயர் நீதிமன்றம் தெளிவான வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. உயர்நீதிமன்றம் இந்தக் குடிசைப் பகுதிகளுக்கு அருகாமையில், போதுமான நீர் வழங்கல், சிறப்பு வார்டுகளை நிறுவ முன்மொழிந்துள்ளது. இருமல், தும்புதல் மூலம் வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த வேண்டி, குடிசை வாழ் மக்களுக்கு சுத்திகரிப்பான்களையும், முகமூடிகளையும் விநியோகிக்குமாறு அரசாங்கத்திற்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மக்கள்தொகை கணக்கு சீனாவில் ஒரு சதுர கிலோமீட்டருக்கு 148 ஆகவும், இந்தியாவில் 420 ஆகவும் உள்ளது.
இந்தியாவில் ஆரோக்கியமற்றக் குடிசைப் பகுதிகளில் கோவிட்-19 பரவினால், அதன் விளைவானது கற்பனையில் கூட எண்ணிப்பார்க்க முடியாததாய் இருக்கும். கோவிட்-19ஐ உலக சுகாதார நிறுவனமானது தொற்று நோயாக அறிவிக்க மறுத்தாலும், அது இன்னும் அதன் முழு திறனை எட்டவில்லை என்ற சீனாவின் குடியரசுத் தலைவர் ஜி ஜின்பிங்கின் கருத்து அதிர்ச்சியளிக்கிறது.
சீனாவில் அடிமட்ட நிலையிலேயே உறுதி செய்யப்பட்ட 80,000 கோவிட்-19 நோயாளிகளில், 3,000 பேர் இறந்துவிட்டனர். 6,000 பேர் இன்னும் அந்தக் கொடிய நோயுடன் போராடிக் கொண்டிருக்கிறார்கள். சீன பரிசோதனைக் கூடங்களிலிருந்தே கோவிட்-19 தயாரிக்கப்படுகிறது என்று அறிக்கைகள் வெளிவந்துள்ளன. சீனாவை அடுத்து, அதிகளவிலான இறப்புகள் இந்தாலியிலும் (148), ஈரானிலும் (107), வட கொரியாவிலும் (35) பதிவு செய்யப்பட்டுள்ளன.