தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கரோனாவுக்கு எதிராகப் போராட நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பதே ஒரே வழி!

ஈடிவி பாரத்தின் தொலைபேசி நேர்காணலில் பேசிய வெய்ன் மாநிலப் பல்கலைக்கழகத்தில் இணை பேராசிரியர் டாக்டர் கிருஷ்ணா ராவ், வீக்கம் என்றால் என்ன, வீக்கத்திற்கும் கரோனாவுக்கும் உள்ள தொடர்பு என்ன, நோய் எதிர்ப்புச் சக்தி என்றால் என்ன, மனிதர்களில் நோய் எதிர்ப்பு சக்தியின் அளவை அதிகரிப்பதற்கான வழிமுறைகள் எவை, மனிதர்களில் வீக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் கொழுப்பு அமிலங்களால் ஆற்றப்படும் பங்கு என்ன என்பது போன்ற பல கேள்விகளுக்குப் பதிலளித்தார்.

வெள்ளை ரத்த அணுக்கள்
வெள்ளை ரத்த அணுக்கள்

By

Published : May 9, 2020, 7:32 PM IST

கோவிட்-19 என்பது ஒரு கண்ணுக்குத் தெரியாத எதிரியுடனான சண்டை. எதிரி எத்திசையில் தாக்குவான் என்பதை யாரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இத்தகைய அசாதாரண சூழலில் கொடிய வைரஸின் தாக்குதலில் இருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள நாம் ஒவ்வொருவரும் தயாராக இருக்க வேண்டும்.

நம் உடலுக்குள் நுழையும் கரோனா வைரஸைக் கையாள்வதற்கும், எதிர்தாக்குதல் நடத்துவதற்கும் உடல் திறன் கொண்டதாக இருக்கிறதா என்று நம்மை நாமே ஆராய்ந்து பார்க்க முயற்சிக்க வேண்டும். அமெரிக்காவின் டெட்ராய்டைச் சேர்ந்த பிரபல விஞ்ஞானியான டாக்டர் மடிபதி கிருஷ்ணா ராவ், கரோனா வைரஸ் தொற்று நோயைக் கையாளுவதற்கான ஒரே வழி நாம் நமது நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரிப்பதே என்கிறார். இவர் வெய்ன் மாநிலப் பல்கலைக்கழகத்தில் இணை பேராசிரியராகவும், லிப்பிடோமிக் கோர் வசதியின் இயக்குநராகவும் பணியாற்றி வருகிறார்.

வெள்ளை ரத்த அணுக்கள்

கொழுப்பு அமிலங்கள் குறித்து விரிவான ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வரும் கிருஷ்ணா ராவ், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவை உட்கொண்டால் நோய் எதிர்ப்புச் சக்தியினை அதிகரிக்கும் என்கிறார். உடலில் ஏற்படும் வீக்கங்களைக் குறைப்பதற்கும் அதிகரிப்பதற்கும் இது பயன்படுகிறது என்றும் அவர் கூறுகிறார். பெரும்பாலான நோய்கள் மனிதர்களில் அதிகரிக்கும் வீக்கங்களால் ஏற்படுகின்றன என்றும் கூறினார். 5 முதல் 10 விழுக்கடு கரோனா இறப்புகளும் இந்த நிலை காரணமாகத்தான் ஏற்படுவதாகக் கூறுகிறார்.

இதுகுறித்து ஈடிவி பாரத்தின் தொலைபேசி நேர்காணலில் பேசிய கிருஷ்ணா ராவ், வீக்கம் என்றால் என்ன, வீக்கத்திற்கும் கரோனாவுக்கும் உள்ள தொடர்பு என்ன, நோய் எதிர்ப்புச் சக்தி என்றால் என்ன, மனிதர்களில் நோய் எதிர்ப்பு சக்தியின் அளவை அதிகரிப்பதற்கான வழிமுறைகள் எவை, மனிதர்களில் வீக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் கொழுப்பு அமிலங்களால் ஆற்றப்படும் பங்கு என்ன என்பது போன்ற பல கேள்விகளுக்குப் பதிலளித்தார்.

குணப்படுத்தும் செயல்முறைகள்׃

உடல் காயமடையும்போது, உடலில் உள்ள வெள்ளை ரத்த அணுக்களானது, இறந்த செல்களை அகற்ற முயற்சிக்கின்றன. இந்தக் காயங்கள் வழியாக நோய்க்கிருமிகள், பாக்டீரியாக்கள், வைரஸ்கள் போன்றவை உடலுக்குள் நுழையும்போது, அவற்றை வெள்ளை ரத்த அணுக்கள் வெளியேற்றுகின்றன.

வெள்ளை ரத்த அணுக்கள்

இந்த இரு நிகழ்வுகளால் உடலில் ஏற்படும் தடிப்பே, வீக்கம் என்று அழைக்கப்படுகிறது. இது உடலில் சேதமடைந்துள்ள பகுதியினைக் குணப்படுத்தும் செயல்முறையாகும். இந்தச் செயல்முறையினை எதிர்மறையான விதத்தில் நாம் பார்க்கக்கூடாது. அது நடக்கவில்லை என்றால், உடலானது, உட்புற அல்லது வெளிப்புறக் காயங்களுக்கு எதிர்வினையாற்றவில்லை என்று பொருள். வீக்கம் என்பது நான்கு வகையான அறிகுறிகளால் வகையறுக்கப்படுகிறது׃ வீக்கம், வலி, சிவத்தல், காய்ச்சல்.

தீங்கு விளைவிக்கும் நோயக்கிருமிகளைத் தடைசெய்தல்׃

உடலில் சிவப்பு ரத்த அணுக்கள் ஒரே ஒரு வகை மட்டுமே உள்ளது. ஆனால், வெள்ளை ரத்த அணுக்கள் பல வகைகளில் உள்ளன. ஒவ்வொரு வெள்ளை ரத்த செல்லும் ஒவ்வொரு தனித்துவமான செயலைச் செய்கின்றன. சில செல்கள் அழிக்கப்பட வேண்டிய வைரஸ்களை எடுத்துச் செல்கின்றன.

சில செல்கள் வெளியேற்றப்பட வேண்டிய வைரஸ்களை வெளியேற்றும் வேலையைச் செய்கின்றன. இன்னும் சில சேதமடைந்துள்ள உறுப்புகளில் செய்ய வேண்டிய குறிப்பிட்ட செயல்பாட்டினைச் செய்கின்றன. வெள்ளை இரத்த அணுக்களானது, நுரையீரல், செரிமான அமைப்பு போன்ற உடலின் வெவ்வேறு இடங்களில் நிலைநிறுத்தப்பட்டு, அந்தந்த இடங்களுக்கேற்ற செயல்பாடுகளைச் செய்கின்றன.

பிளீச்சிங் பவுடரைக் காட்டிலும் அதிக நச்சுத்தன்மை கொண்ட ரசாயனத்தை வெளியிடும் வெள்ளை ரத்த அணுக்கள்:

மனித உடலில் உட்புகும் நுண்ணுயிரிகளை அழிக்க மனித உடலில் ஒரு பெரிய செயல்பாட்டு முறை நடைபெறுகின்றது. முதலாவதாக, ஒமேகா- 6 கொழுப்பு அமிலங்களானது, புரோஸ்டாக்லாண்டின்கள், லூகோட்ரியன்கள் எனப்படும் சேர்மங்களை வெளியிடுவதன் மூலம் செயல்பட ஆரம்பிக்கின்றன. இந்தக் கலவைகள், வெள்ளை ரத்த அணுக்களை ஈர்க்கின்றன.

உடனே ஒரு வகை வெள்ளை ரத்த அணு செயலில் நுழைகிறது. உதவிக்காக பிற வெள்ளை இரத்த அணுக்களை ஈர்க்கவேண்டி, சைட்டோகைன்கள் எனும் புரத மூலக்கூறுகளை அவை வெளியிடுகின்றன. சைட்டோகைன்களிலும் பல வகைகள் உள்ளன. உதவிக்கு வந்த மற்ற வெள்ளை ரத்த அணுக்கள், நுண்ணுயிரிகளைப் பல துண்டுகளாக கூறுபோடுகின்றன.

தீங்கு விளைவிக்கும் உயிரினங்களை வடிகட்டி அவற்றை வெளியேற்றும் செயல்முறையின் ஒரு பகுதியாக, சக்தி வாய்ந்தம், கொடிய ரசாயனங்களை வெளியிடுகின்றன. இந்த ரசாயனங்களானது நாம் நம் வீடுகளைச் சுத்தம் செய்யப் பயன்படுத்தும் வழக்கமான சலவைப் பொடியினைவிட மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்தவையாகும். சில நேரங்களில் இந்த ரசாயனங்கள் உடலில் உள்ள சாதாரண செல்களைக் கூட சேதப்படுத்திவிடும். இந்த முழுமையான செயல்முறையே வீக்கம் என்று அழைக்கப்படுகிறது.

வெள்ளை ரத்த அணுக்கள்

வீக்கத்தினைக் குறைக்கும் காரணிகள்׃

நுண்ணுயிரிகளை அழிக்கும் செயலில் வீக்கம் என்பது உச்சகட்ட நிலை. காயம் குணமடைந்துவிட்டதாகத் தோன்றும்போது, வீக்கத்தினை உண்டாக்கும் வெள்ளை ரத்த அணுக்களானது, மெதுவாக அவற்றின் தோற்றத்தினை மாற்றிக் கொள்கின்றன. ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களால் உதவி செய்யப்பட்டு, வெள்ளை செல்கள் மீண்டும் வடிவம் பெறுகின்றன.

கொழுப்பு அமிலங்களால் வெளியடப்படும் சில வகையான கூறுகள் வீக்கத்தினைக் குறைக்கும். இந்தச் செயல்முறையானது ’வீக்கத் தீர்வு’ அல்லது ’ஒமேகா-3 கொழுப்பு அமிலத் தீர்வு’ என்று அழைக்கப்படுகிறது. சில சந்தர்ப்பங்களில், மனித உடலில் ஒமேகா-3 கொழுப்புகள் போதுமான அளவு இல்லாவிட்டாலோ அல்லது உடலில் ஏற்படும் வீக்கத்தினைக் கட்டுப்படுத்தக் கூடிய சேர்மங்களின் வெளியீட்டில் சிக்கல்கள் இருந்தாலோ, வீக்கத்தின் செயல்முறையானது இடைவிடாது தொடரும். இந்த நிலைமையானது குறிப்பிட்ட நபரின் ஆரோக்கியத்தில் மேலும் பல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.

எழுச்சியடையும் சைட்டோகைன்கள்׃

உடலில் கட்டுப்பாடற்ற வீக்கம் ஏற்படுவதால் பல ஆபத்துகள் உள்ளன. இருதய நோய், புற்றுநோய் போன்ற நோய்கள் வீக்கத்தில் கட்டுப்பாடு இல்லாததால் ஏற்படுகின்றன. அவை நாள்பட்ட வீக்க நோய்கள் என்று அழைக்கப்படுகின்றன. சுமார் ஐந்து பேருக்கு மரபணுவால் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டால், மீதமுள்ள 95 பேருக்கு ஏதேனும் ஒரு வகை வீக்கத்தினால் மட்டுமே வந்துள்ளது.

கோவிட்-19 நோயாளிகளைப் பொறுத்தவரையில், சுமார் 90-95 சதவிகித நோயாளிகளின் உடலில் உள்ள வெள்ளை ரத்த அணுக்களானது வைரஸைக் கொல்லுவதில் வெற்றிகரமாகச் செயல்படுகின்றன. மேலும், இந்தச் செயல்பாட்டினால் நோயாளியின் நோய் எதிர்ப்புச் சக்தியின் அளவும் அதிகரித்து வருகிறது.

இருப்பினும், மீதமுள்ள 5-10 சதவிகித நோயாளிகள் கட்டுப்பாடற்ற வீக்கத்தினால் பாதிக்கப்படுகின்றனர். இது அவர்களின் மரணத்திற்கான வாய்ப்பினை மிகவும் அதிகரிக்கிறது. அத்தகைய நோயாளிகளின் உடலில் வீக்க செயல்பாட்டிற்குப் பங்களிக்கும் சைட்டோகைன்கள் ஒரு எழுச்சியாக வெளியிடப்படுகின்றது. இந்த எழுச்சியானது, ’சைட்டோகைன் புயல்’ என்றழைக்கப்படுகிறது.

ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள்:

மனித உடலின் அனைத்து உறுப்புகளிலும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் ஏராளமாக இருந்தாலும், அவை மனித மூளையில்தான் அதிக அளவில் காணப்படுகின்றன. எனவே, அவற்றை உருவாக்கும் திறன் என்பது மனித உடலுக்கு மிகவும் சிறியது. அவை தாய்ப்பாலில் பெருமளவு உள்ளது. மேலும், மீன் சாப்பிடுவதன் மூலமும், மீன் எண்ணெய் உள்ளடக்கிய மிகவும் எளிதில் கரையும் உறையினை உட்கொள்ளுவதன் மூலமும் உடலில் அது பெருகும்.

பின்வருவனவற்றைக் கொண்டும் அவற்றை நம் உடலில் பெருக்க முடியும்:

  • தினசரி அடிப்படையில் மீன் எண்ணெய் உள்ளடக்கிய மிகவும் எளிதில் கரையக்கூடிய உணவினையும், மல்ட்டி வைட்டமினையும் எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • மஞ்சள், வீக்க எதிர்ப்புப் பண்புகளைக் கொண்டுள்ளது. இருப்பினும், அதனை சிறிய அளவு மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும். ஆளி விதைகளிலும் ஒமேகா-3 கொழுப்புகள் உள்ளன.
  • உடல் வியர்க்க உதவும் வகையில் தினமும் 20-30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
  • வெள்ளை ரத்த அணுக்கள் செயல்பட்டுக் கொண்டிருக்க ஆக்ஸிஜன் அவசியமாகும். ஆவி பிடித்தல் நுரையீரலானது ஆக்ஸிஜனை நன்கு பெறுமளவிற்கு சுவாசக் குழாயைத் திறக்கின்றது. எனவே ஆவி பிடிக்கலாம்.
  • காய்ச்சல் ஏற்பட்டால் பாராசிட்டமால் மாத்திரையை எடுத்துக்கொள்ள வேண்டும். ’ஸ்டெராய்டல் அல்லாத வீக்க எதிர்ப்பு மருந்துகள்’ உபயோகிப்பது நல்லதல்ல. மருத்துவர்கள் பரிந்துரைத்தால் மட்டுமே ஆஸ்பிரின் எடுக்க வேண்டும்.
    வெள்ளை ரத்த அணுக்கள்

நோய் எதிர்ப்புச் சக்தி என்றால் என்ன?

லிம்போசைட்டுகள் எனப்படும் வெள்ளை ரத்த அணுக்கள் மனித உடலில் நுழையும் வைரஸ்களை உட்செரிக்கின்றன. அதே வைரஸானது மீண்டும் நம் உடலில் உட்புகும்போது, இந்தச் செல்கள் உடனடியாக அதனைக் கண்டறிந்து, வைரஸால் உடலுக்குப் பாதகம் ஏற்படாமல் பாதுகாக்க வேண்டி ஆன்டிபாடிகள் எனப்படும் புரதங்களை உண்டாக்குகின்றன.

உடலானது, மீண்டும் அதே வைரஸால் பாதிக்கப்படும்போது, இந்த ஆன்டிபாடிகள் அவற்றினைக் கண்டறிந்து, அவை உடலில் நுழைந்தவுடன் அந்த வைரஸ்களைத் தாக்குகின்றன. பின்னர் அந்த வைரஸ்கள், செரிமான மண்டலத்திற்குச் சுமந்துகொண்டு செல்லும் வெள்ளை ரத்த அணுக்களிடம் ஒப்படைக்கப்படுகின்றன. இதனால் அவை வெளியேற்றப்படுகின்றன. இதுவே ஒரு முறை வைரஸால் பாதிக்கப்பட்ட ஒரு உடல் மீண்டும் மீண்டும் தொற்றுநோய்க்கு ஆளாகுவதன் காரணம் ஆகும். இதனால் மனிதனுக்கு எந்த ஆபத்தும் இல்லை. இது நோய் எதிர்ப்பு சக்தி என்று அழைக்கப்படுகிறது.

தடுப்பூசி போடுவதற்கான காரணம்׃

வைரஸூக்கு எதிரான நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க மட்டுமே தடுப்பூசி போடப்படுகிறது. தடுப்பூசி செயல்முறை மூலம் நடுநிலைப்படுத்தப்பட்ட வைரஸானது ரத்தத்தில் செலுத்தப்படுகிறது. செயலற்ற இந்த வைரஸ் நமக்கு எந்தத் தீங்கும் செய்ய முடியாது. இருப்பினும், நம் உடலில் உள்ள வெள்ளை ரத்த அணுக்களானது அதைக் கண்டறிந்து உடனடியாக ஆன்டிபாடிகளை உருவாக்கத் தொடங்குகின்றன.

இவை வைரஸூக்கு எதிராக உடலானது நோய் எதிர்ப்புச் சக்தியினை உருவாக்குகிறது. இருப்பினும், இந்த ஆன்டிபாடிகள் பாதிக்கப்பட்ட நபருக்குத் தற்காலிக நோய் எதிர்ப்புச் சக்தியினை மட்டுமே வழங்க முடியும். ஆனால், அது நிரந்தரமான ஒன்று அல்ல. ஒற்றை வைரஸைக் கண்டறிய ஒற்றை ஆன்டிபாடியே போதுமானதாகும். இருப்பினும், நம் உடலானது ஒரே வைரஸூக்கு பலவிதமான ஆன்டிபாடிகளை உருவாக்கும் செல்களை உருவாக்குகிறது. இவ்வாறு உருவாக்கப்படும் ஆன்டிபாடிகள் பொதுவாக உடலில் கிட்டத்தட்ட வாழ்நாள் முழுவதும் இருக்கும்.

கரோனா வைரஸூக்கு சிகிச்சையளிக்க தற்போது மருந்து இல்லை. ஆன்டிபயாடிக்குகளால் (நுண்ணுயிர் எதிரிகள்) எந்த வைரஸ்களுக்கும் சிகிச்சையளிக்க முடியாது. கரோனா நோயால் பாதிக்கப்பட்ட உடல் பலவீனமடைவதைத் தடுக்கவும், பிற பாக்டீரியா தொற்றுகளை வளர்ப்பதற்கும் மட்டுமே நுண்ணுயிர் எதிரிகளுக்கு அறிவுறுத்தப்படுகின்றன.

உங்கள் கைகளைச் சுத்தமாக வைத்திருத்தல், சமூக விலகலைப் பயிற்சி செய்தல், நோய் எதிர்ப்புச் சக்தியினை அதிகரிக்கும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அடங்கிய உணவுகளை உட்கொள்ளவது போன்றவை கரோனா தொற்றுநோயை சமாளிக்கும் திறனை அதிகரிக்கும்.

கரோனா வைரஸில் மரபணு மாற்றம் விரைவான வேகத்தில் நடக்கின்றது. அது ஒரு உயிருள்ள அணு அல்ல. கரோனா வைரஸானது வேறு ஏதாவது உயிரணுக்குள் நுழையும்போது மட்டுமே அது உயிர்ப்பிக்கப்படுகிறது. இத்தகைய வைரஸ்களை எதிர்க்கும் சக்தி மனித தேகத்திற்கு உண்டு. ஆனால், இந்த வைரஸ் வாய், மூக்கு, காது, கண்கள் வழியாக நுழையும்போது, அது நேரடியாக ரத்தத்துடன் கலக்கிறது.

கரோனா வைரஸ் நேரடியாக மனித செரிமான அமைப்புக்குள் சென்றால், எந்தத் தீங்கும் இல்லை. இருப்பினும், வாயில் நுழைந்தபின், ரத்த ஓட்டத்தில் இறங்காமல் நேராக செரிமானப் பாதைக்குள் செல்ல வாய்ப்பில்லை. வைரஸ் ரத்த ஓட்டத்தில் நுழையும் போது மட்டுமே வீக்கம் அதிகரிக்கிறது.

மனித உடலில் வைரஸ் தொற்றும்போது, முதல் முறையாக ஆன்டிபாடிகள் உடலில் உற்பத்தி செய்யப்படுகின்றன. வைரஸானது அதே நபரை மீன்டும் தொற்றும் போதெல்லாம், இந்த ஆன்டிபாடிகள் தாக்கி அழிக்கின்றன.

ABOUT THE AUTHOR

...view details