சீனாவில் பல்வேறு பகுதிகளில் கரோனா வைரஸ் கடுமையான தாக்தத்தை ஏற்படுத்திவருகிறது. குறிப்பாக வூஹான் நகரம், கரோனா வைரஸ் காரணமாக முற்றிலும் முடங்கியுள்ளது. கனடா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளிலும் கரோனா வைரஸ் பரவியுள்ளது. அதேபோல கேரளாவிலும் இருவருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டது.
கரோனா வைரஸ் வேகமாகப் பரவிவருவதால், நாளுக்கு நாள் உயிரிழப்பின் எண்ணிக்கை அதிகரித்தபடி உள்ளது. இந்நிலையில், இந்த வைரஸ் தொற்று காரணமாக 361 பேர் உயிரிழந்துள்ளதாக சீன அரசு அறிவித்துள்ளது.
மேலும் 56 பேருக்கு கொடிய வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதார அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். இவர்கள் அனைவரும் ஹுபெய் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள். இதுதவிர 16 ஆயிரத்து 600 பேருக்கு கரோனா வைரஸ் தாக்குதல் உறுதியாகி உள்ளது. ஒரே நாளில் இரண்டாயிரத்து 103 பேருக்கு நோய் பரவியிருப்பதாகச் சீன சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது. அவர்களில் 478 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர்.
இந்த நோயைக் கட்டுப்படுத்த சீனா அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. சீனாவின் வூஹான் மாநிலத்தில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க ஒன்பதே நாள்களில் அங்கு அதிநவீன மருத்துவமனை கட்டிமுடிக்கப்பட்டுள்ளது.