பொது இடங்களில் மக்கள் கூடுவதைத் தவிர்க்க வேண்டும் என்று சுகாதாரத் துறை அமைச்சகம், கடந்த மார்ச் 5ஆம் தேதி அறிவித்தது. இதையடுத்து பொது இடங்களில் மக்கள் கூடுவதைத் தடுக்கும் விதமாக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.
கொரோனா எதிரொலி உச்ச நீதிமன்றத்தில் கடும் கட்டுப்பாடுகள் - Corona Update: Restrictions in Apex Court
18:00 March 13
டெல்லி: கொரோனா வைரஸ் தொற்றின் அச்சம் காரணமாக உச்ச நீதிமன்றத்தில் அவசர வழக்குகள் மட்டுமே விசாரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இன்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ் ஏ போப்டே தலைமையில் இன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. அதன்படி, வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தும் விதமாக உச்ச நீதிமன்றத்தில் அவசர வழக்குகள் மட்டுமே விசாரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்ற வளாகம் என்பது வழக்கறிஞர்கள், அவர்களின் உதவியாளர்கள், சாட்சியளிக்க வருபவர்கள், மாணவர்கள் என பலரும் கூடும் இடமாக உள்ளது. இது கோவிட் 19 வைரஸ் தொற்று எளிதில் பரவ வழிவகுத்துவிடும். எனவே, வழக்கில் வாதிடும் வழக்கறிஞர் மற்றும் அவருக்கான உதவி வழக்கறிஞர், வழக்கில் சாட்சியாக இருப்பவர் உள்ளிட்டவர்களைத் தவிர, மற்ற யாரும் நீதிமன்ற அறையில் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கொரோனாவுக்கு இடையிலும் இலங்கையில் தேர்தல் பணிகள் தீவிரம்