புதுச்சேரி சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமிக்கு கரோனா - அமைச்சர் கந்தசாமி
புதுச்சேரி: சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமிக்கு கரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து, அவரது வீட்டைச் சுற்றிலும் தடுப்பு அமைத்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
புதுச்சேரி மாநில சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமி, அவரது இளைய மகன் விக்னேஷ் ஆகியோருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 4) கந்தசாமியின் தாயாருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், கந்தசாமி அவரது மகன் விக்னேஷ் ஆகிய இருவருக்கும் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
இதற்கிடையே இன்று செய்தியாளர்களைச் சந்தித்த முதலமைச்சர் நாராயணசாமி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் அமைச்சர் கந்தசாமி நலமுடன் இருப்பதாகத் தெரிவித்தார்.
புதுச்சேரி உப்பளம் தொகுதியில் அமைந்துள்ள அமைச்சர் கந்தசாமி வீடு, கரோனா காரணத்தால் அரசு சார்பில் தடுப்பு வேலி அமைக்கப்பட்டு,கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டது. மேலும் அப்பகுதி முழுவதும் கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டு, கட்டுப்பாட்டுப்பகுதியாக மாற்றப்பட்டது.