தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

புதுச்சேரி சுகாதாரத் துறை இயக்குநருக்கு கரோனா! - Director of Health Sriramalu

புதுச்சேரி சுகாதாரத் துறை இயக்குனர் ஸ்ரீராமலுவிற்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநருக்கு கரோனா
புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநருக்கு கரோனா

By

Published : Jan 3, 2021, 2:43 PM IST

புதுச்சேரியில் நேற்று (ஜன.3) புதிதாக 10 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் புதுச்சேரி சுகாதாரத் துறை இயக்குனர் ஸ்ரீராமலுவிற்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், தற்போது அவர் ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து சுகாதாரத் துறை இயக்குனர் அலுவலகத்தில் கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட்டது. மேலும் அவருடன் தொடர்பில் இருந்த அரசு அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் தங்களை தனிமைப்படுத்தி கொண்டுள்ளனர்.

இதையும் படிங்க:சவுரவ் கங்குலியின் உடல் நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை தகவல்

ABOUT THE AUTHOR

...view details