புதுச்சேரியில் அரியாங்குப்பம், திருபுவனை, மூலக்குளம், முத்தியால்பேட்டை பகுதிகளில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், சென்ற 40 நாள்களாக தனிமைப்படுத்தப்பட்டு காவல் துறையினரால் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கரோனாவால் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் பணிபுரிந்த காவலர்களுக்கு இன்று கோரிமேடு பகுதியில் உள்ள காவலர் பயிற்சி பள்ளியில் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
காவலர்களுக்கு கரோனா பரிசோதனை மேலும் சிறப்பு மருத்துவக் குழுவால் உமிழ்நீர் எடுத்து சோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில், இதனை முதுநிலை காவல் கண்காணிப்பாளர் ராகுல் அல்வால் நேரில் பார்வையிட்டார். முதல்கட்டமாக இன்று (மே-11) 100 காவலர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இவர்களுக்குக்கான முடிவுகள் நாளை (மே-12) மாலை தெரியும் என்று சுகாதாரத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பாக்கு மட்டை முகக்கவசம் - அசத்தும் விவசாயி