தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

நிலையான பொருளாதார வளர்ச்சியை முடக்கிய கரோனா! - Sustainable Economic Development

கோவிட்-19இன் விளைவாக பொருளாதாரத்தின் நிலை இப்போது மீண்டும் அதன் தொடக்க நிலைக்கே வந்துவிட்டது. நிலையான மேம்பாட்டு இலக்குகளைத் தேடுவதற்காக, வருடாந்திர அடிப்படையில், மாநிலங்களின் தரங்களை சரியான நேரத்தில் மதிப்பாய்வு செய்வதன் மூலம் அதன் பொருளாதார இலக்குகளை அடைய முயற்சிக்கும் இந்தியாவின் நிலைமை, இப்போது உண்மையில் பழம் நழுவி பாலில் விழாமல் நெருப்பில் விழுந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

பொருளாதார வளர்ச்சி
பொருளாதார வளர்ச்சி

By

Published : Jul 20, 2020, 1:13 AM IST

உலகம் முழுவதும் இருக்கும் பல கோடி மக்களின் வாழ்க்கையை அமைதியாக மூழ்கடித்துக் கொண்டிருக்கும் சுருக்கு வலையாக இருக்கிறது, 'வறுமை'. கோவிட்-19 தொற்றுநோய் பரலால் வாழ்வாதாரமின்றி முற்றிலும் வறுமை மற்றும் பசிக்கொடுமைக்கு தள்ளப்பட்டுள்ள பல லட்சம் மக்களின் அவலநிலையை, ஐக்கிய நாடுகள் சபையின் சமீபத்திய அறிக்கை சுருக்கமாகக் குறிப்பிட்டுள்ளது.

அடிப்படை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றாவிட்டால், கரோனா நெருக்கடி நிச்சயம் மேலும் மோசமடையும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. உலகம் முழுவதும் சுமார் 1.31 கோடி மக்களை ஏற்கனவே பாதித்துள்ள கரோனா, 5.72 லட்சம் மக்களின் உயிரையும் பறித்துள்ளது. அதுமட்டுமின்றி, நாடுகளின் பொருளாதாரங்களை சிதைத்து, மக்களின் வாழ்க்கைத் தரத்தை படுபாதாளத்தில் தள்ளி இருக்கிறது.

கடந்த ஆண்டில், சரியான ஊட்டச்சத்து இல்லாமல் சுமார் 69 கோடி மக்கள் தவித்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது. எப்படியானாலும், இந்த ஆண்டின் புள்ளி விவரங்கள் ஒரு புதிய கணக்கீட்டைக் கொண்டு வருகின்றன; அதாவது, கோவிட் -19 முட்டுக்கட்டையால் கடந்த ஆண்டின் எண்ணிக்கையுடன் இம்முறை சுமார் 13.2 மில்லியன் மக்கள் சேர்க்கப்படலாம் என்று இந்திய உணவு மற்றும் வேளாண்மைக்குழு வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிக்கின்றன. உலகம் முழுவதும் ஏறத்தாழ 300 கோடி மக்கள் தங்களுக்கு ஆரோக்கியமான, சத்தான உணவை வாங்கவோ, சாப்பிடவோ முடியாதவர்கள் என்று சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

கரோனா பரவலானது வேலை வாய்ப்புகளை குறைத்தும், பெரியவர்களுக்கு வேலையிழப்பை ஏற்படுத்தியும் இருக்கிறது. அத்துடன், பள்ளிகள் மூடப்பட்டு இருப்பதால் மதிய உணவை முன்னறிவிப்பின்றி நிறுத்தியதன் மூலம், இளைஞர்களையும் முதியவர்களையும் பட்டினி மற்றும் வறுமை போன்ற பெரிய நெருக்கடியின் அடிப்படையில் ஒரே மாதிரியாகக் கொண்டு வந்திருக்கிறது. இதனால் அரசுகள் தங்கள் குடிமக்களுக்கு சரியான ஊட்டச்சத்தை வழங்க முடியுமா, வரும் 2030ஆம் ஆண்டளவில் சுகாதாரச் செலவினங்களுக்காக ஒவ்வொரு ஆண்டும் 1,30,000 கோடி டாலர்களை செலவிடுவதை மிச்சப்படுத்த முடியுமா என்ற குழப்பத்திற்கு, அரசுகளை கரோனா தள்ளியுள்ளது.

உலகப் பொருளாதாரம் படு மந்தநிலைக்குச் செல்கையில், 2030ஆம் ஆண்டுக்குள் அடையப்பட வேண்டிய நிலையான மேம்பாட்டு இலக்குகள் தவறவிடப்படலாம் என்ற அச்சுறுத்தல் அதிகரித்து வருகிறது. கரோனாவைத் தவிர வெள்ள பாதிப்பு மற்றும் வெட்டுக்கிளிகள் படையெடுப்பு போன்ற இயற்கை பேரழிவுகளும் மக்களின் சமூக வாழ்க்கை நிலைமைகளை குறைந்து வருவது, பொதுவாக பெரும் கவலையை ஏற்படுத்துகிறது.

உலகின் பிறநாடுகளை முன்னேற்றத்தின் பாதையில் ஒருங்கிணைக்கும் குறிக்கோளுடன், 2015 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபை வகுத்த 17 நிலையான மேம்பாட்டு இலக்குகளின் செயல் திட்டத்திற்கு 193 நாடுகள் ஒப்புதல் அளித்தன. பதினைந்து ஆண்டு செயல்பாட்டு இயக்கவியல் பற்றிய வருடாந்திர மதிப்பீட்டோடு முன்னேறி வரும் சூழலில், இந்தியா போன்ற நாடுகளின் முன்முயற்சிகள், கோவிட் தொற்றுநோய் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. உலகளவில் வறுமை ஒழிப்பு முதலாவது குறிக்கோள், பசியை ஒழிப்பது இரண்டாவது குறிக்கோளாகும்.

உடல் ஆரோக்கியம் மற்றும் நல உதவுி, தரமான கல்வி, பாலின சமத்துவம் போன்ற இலக்குகள் அடுத்தடுத்து வருகின்றன. கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்தியா இந்த இலக்குகளை அடைய முயற்சி செய்து வரும் நிலையில், கோவிட் என்ற கொடிய வைரஸின் தாக்கம், அந்த முயற்சியின் வெற்றி வாய்ப்புகளை துடைத்து எறிந்துவிட்டது. கோவிட்-19இன் விளைவாக பொருளாதாரத்தின் நிலை இப்போது மீண்டும் அதன் தொடக்க நிலைக்கே வந்துவிட்டது. நிலையான மேம்பாட்டு இலக்குகளைத் தேடுவதற்காக, வருடாந்திர அடிப்படையில், மாநிலங்களின் தரங்களை சரியான நேரத்தில் மதிப்பாய்வு செய்வதன் மூலம் அதன் பொருளாதார இலக்குகளை அடைய முயற்சிக்கும் இந்தியாவின் நிலைமை, இப்போது உண்மையில் பழம் நழுவி பாலில் விழாமல் நெருப்பில் விழுந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

சுமார் 160 கோடி தொழிலாளர்களைக் கொண்ட உலகின் தொழிலாளர் தொகுப்பில் பாதி பேரை கொண்டுள்ள அமைப்புசாராத்துறை தொழிலாளர்களின் வருமானம் குறைந்திருப்பது, உலகளாவிய பொருளாதார குறியீட்டை வெகுவாகக் குறைத்துள்ளதாக, ஒரு வாரத்திற்கு முன்பு ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதார மற்றும் சமூக விவகாரங்கள் துறை கூறியது. நோய்த்தடுப்பு மருந்துகள் மற்றும் பிற ஊட்டச்சத்து திட்டங்களுக்கு இடையூறு ஏற்பட்டிருப்பது, இந்த ஆண்டில் பிரசவத்தின் போது தாய் இறப்பு அதிகரிப்புக்கு வழிவகுக்கும் என்று அஞ்சப்படுகிறது. கோவிட் -19 தொற்றால் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால், சுமார் 157 கோடி குழந்தைகள் பள்ளியில் பயிலும் வாய்ப்பில் இருந்து வெளியேறிவிட்டதாக ஐ.நா. மதிப்பிட்டுள்ளது.

கணினிகள் மற்றும் இணையதள வசதிகள் இல்லாததால் பல கோடி குழந்தைகளின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. அவ்வகையில் கரோனா தொற்று, தற்போதைய தலைமுறையை மட்டுமின்றி தேசத்தின் எதிர்காலத்தையும் பாதித்துள்ளது. இந்திய அரசின் நிதி ஆயோக் கூறுகையில், இந்தியா தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கூடுதலாக 6.2 சதவீதத்தை செலவிட்டால் மட்டுமே அதன் நிலையான மேம்பாட்டு இலக்குகளை அடைய முடியும் என்றது. ஒவ்வொரு நாடும் வெளிப்படுத்தி வரும் தற்போதைய நிதி நெருக்கடி சூழல் என்பது, அரசுகளின் செயல்திறனுக்கான மிகப்பெரிய சோதனையாகவே உள்ளது.

இதையும் படிங்க: ரெம்டெசிவிர்: கள்ளச் சந்தையில் கரோனா சிகிச்சை மருந்துக்கு தங்கத்தின் விலை - ஈடிவி பாரத் கள ஆய்வு

ABOUT THE AUTHOR

...view details