ஹைதராபாத்: கரோனா அச்சுறுத்தல் உள்ள நிலையில் இந்ததீபாவளி பண்டிகையின் போது, வழக்கத்தை விட அதிகமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்காவிட்டால், பட்டாசு புகை மாசுகளுடன், கரோனா வைரஸ் தொற்று பரவி, நுரையீரல், சுவாசப் பிரச்னைகள் ஏற்படும் என சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால் நாள்பட்ட நோயாளிகள் மற்றும் சுவாசப் பிரச்னைகள் உள்ளவர்கள் பட்டாசு புகைகளிலிருந்து விலகி இருக்க வேண்டும் என்றும் அவர்கள் அறிவுறுத்துகிறார்கள். பட்டாசு புகைகளுடன் கரோனா வைரஸ் உடலுக்குள் உட்புகும்போது பாதிப்பு அதிகமாக இருக்கும். இதனால் தான், டெல்லி உட்பட பல மாநிலங்களில், பட்டாசு விற்பனைத் தடை செய்யப்பட்டுள்ளது.
பரவலுக்கு அதிக சாதகம்:
பொதுவாக, காற்று மாசுபாடுகள் வழக்கத்தைவிட, தீபாவளிக்குப் பிந்தைய நாட்களில் அதிகமாக இருக்கும். இதனால், அதிமான சுகாதாரப் பிரச்னைகள் உருவாகின்றன. இந்தப் பண்டிகை காலங்களில், ஏற்கெனவே கரோனாவிலிருந்து மீண்டவர்கள் மீண்டும் பாதிப்படைய அதிக வாய்ப்புள்ளதாகவும், குளிர் கால மாசுபாடு, தொற்று பாதிப்பு இல்லாதவர்களையும் அதிகம் பாதிக்கலாம் என்றும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் இத்தாலியின் ஆய்வுகள்:
இத்தாலியில், கரோனாவின் முதல் இடைவெளியில் அதிகமான மக்கள் இறந்தனர். மத்திய, தென் இத்தாலி பகுதிகளை விட, மாசு அதிகமாக இருக்கும் வட இத்தாலியில், இறப்பு எண்ணிக்கை அதிகம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவிலும், இது குறித்து பெரிய அளவிலான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மக்கள்அடர்த்தி மிக அதிகமாக உள்ள நியூயார்க் நகரில் இறப்பு விகிதம் அதிகமாக இருந்தது. கரோனா தொடர்பான இறப்புகளை ஆராய்ந்த விஞ்ஞானிகள் கூறுகையில், காற்றில் ஆபத்தான தூசித் துகள்கள் (Suspended Particulate Matter – SPM-2.5) நானோ கன மீட்டருக்கு, ஒரு மைக்ரோ கிராம் உயரும். ஒவ்வொரு நிமிடத்திற்கும், இறப்பு விகிதம் 8 விழுக்காடு அதிகரிக்கிறது. இதேபோல், காற்றின் தரம் மிகக் குறைந்த இடங்களில், கோவிட் இறப்புகள் அதிகரித்திருக்கின்றன. பிரிட்டிஷ் ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்விலும், மாசு காரணமாக கோவிட்டின் தீவிரம் அதிகரித்து வருகிறது என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.