ஒடிசாவில் உள்ள கியோஞ்சர் மாவட்டம் பலபத்ராபூரைச் சேர்ந்தவர் ரஞ்சன் பிரதான். இவர் பெங்களூருவில் பணியாற்றி வந்த நிலையில், சில நாள்களாக உடல்நலம் குன்றி காணப்பட்டதால் ரஞ்சனை தனிமைப்படுத்திக்கொள்ள மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.
இதனிடையே, ரஞ்சன் பிரதான் உயிரிழந்தார். இதையடுத்து, அவரது உடல் சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்டு தகனம் செய்ய ஏற்பாடு நடைபெற்றது. அப்போது, கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாக எண்ணிய கிராம மக்கள், ரஞ்சன் உடலை தகனம் செய்ய எதிர்ப்பு தெரிவித்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், மருத்துவர்கள் இறந்தவரின் உடலை சோதனை செய்தனர். அதில், அவருக்கு கரோனா இல்லை என்பது உறுதிசெய்யப்பட்டது. இதனையடுத்து கிராம மக்கள் உடலை தகனம் செய்ய ஒப்புக்கொண்டனர்.
இதேபோல், கோர்தா மாவட்டத்தைச் சேர்ந் சங்கர் ஜன என்பவர் விபத்தில் கீழே விழுந்து கிடந்துள்ளார். இதைக் கணட மூதாட்டி ஒருவர் அவரது அருகில் அமர்ந்து உதவி கேட்டுள்ளார்.
கரோனா பீதியால் யாரும் நெருங்காத சூழ்நிலையில் அப்பகுதி மக்கள் அவசர ஊர்திக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த மருத்துவக் குழுவினர் கரோனா பீதியின் காரணமாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல மறுத்துவிட்டனர்.
இறந்தவரின் உடலை எடுக்க மறுத்த கிராம மக்கள் இதனையடுத்து அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மக்களுக்கு ஏதேனும் விபத்து என்றால் ஓடி உதவும் மனிதாபிமானம் உள்ள மக்களிடையே இந்த கரோனா அச்சம் புகுந்து மனிதாபிமானத்தை மறக்கடிக்கச் செய்துள்ளது.
இதையும் படிங்க: மனநலம் பாதித்த பெண்ணுக்கு உணவூட்டிய பெண் காவல் அலுவலர்!