தமிழ்நாடு

tamil nadu

சுவாசப் பிரச்னையால் அவதியுறும் கரோனா நோயாளிகள்: அலட்சியம் காட்டும் மருத்துவர்கள்

By

Published : Jul 7, 2020, 7:41 PM IST

பெங்களூரு: மருத்துவர்களின் அலட்சியத்தால் அவதிப்படுவதாக கரோனாவால் பாதிக்கப்பட்ட பேருந்து நடத்துநர் ஒருவர் தெரிவித்துள்ளது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

கரோனா நோயாளி
கரோனா நோயாளி

கர்நாடக மாநிலம் கடகா மாவட்டத்தில் அமைந்துள்ள ஜிஐஎம்எஸ் மருத்துவமனை கரோனா சிறப்பு சிகிச்சை மையமாகவும் செயல்பட்டுவருகிறது. இந்த மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள் கரோனா நோயாளிகளுக்கு முறையான மருத்துவச் சிகிச்சைகள் அளிக்காமல் அலட்சியம் காட்டுவதாகக் குற்றச்சாட்டுக்கள் எழுந்துவந்தன. இந்நிலையில், இங்கு கரோனா சிகிச்சை பெற்றுவரும் பேருந்து நடத்துநர் ஒருவர் மருத்துவர்களின் கவனக்குறைவால் அவதிப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, “கடந்த இரண்டு நாள்களாக இந்த மருத்துவமனையில் கரோனா சிகிச்சை பெற்றுவரும் கரோனா நோயாளிகள் சுவாசப் பிரச்னையால் அவதிபட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அவர்களுக்குப் போதுமான அளவில் சிகிச்சை அளிக்கவில்லை. மொத்தமாக இந்த மருத்துவமனையில் 22 வென்டிலேட்டர்கள் உள்ளன, ஆனால் மருத்துவர்கள் ஆறு வென்டிலேட்டர்களைத்தான் சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படுகிறார்கள். அதிக எண்ணிக்கையிலான நோயாளிகள் அவதிப்படும்போது, இப்படிச் செய்யலாமா, எனக் கேட்டால், ‘மற்ற வென்டிலேட்டர்கள் வேலை செய்யாது’ என அலட்சியமாகப் பதிலளிக்கிறார்கள்” என்றார்.

கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள பேருந்து நடத்துநரின் வருமானம்தான், அவருடைய குடும்பத்தின் வாழ்வாதாரமாக இருக்கிறது. ஒருவேளை மருத்துவர்களின் அலட்சியத்தினால் தனது உயிர் பிரியுமானால், அடுத்து ’நான் என்ன செய்ய முடியும்’ என கனம் மிகுந்த கேள்விக்கணைகளைத் தொடுக்கிறார் பேருந்து நடத்துநர்.

மேலும் அவர், “கரோனாவுக்கு எதிராகப் போராளிகள் போல நாங்கள் செயல்பட்டோம். ஆனால், தற்போது என்னால் எனது குடும்பமும் கரோனாவால் பாதித்துள்ளது. எங்களுக்கு இங்கு முறையான சிகிச்சையும் கிடைக்கவில்லை” என பேசி முடித்தார்.

இதையும் படிங்க: அதிகரிக்கும் கரோனா தொற்று... சுற்றுலா சேவையை ரத்துசெய்த குடகு !

ABOUT THE AUTHOR

...view details