தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தென் ஆப்பிரிக்காவில் ஐந்து லட்சத்தை தாண்டிய கரோனா பாதிப்பு! - கரோனா வைரஸ்

தென் ஆப்பிரிக்காவில் நேற்று (ஆகஸ்ட் 01) ஒரே நாளில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

Covid-19
Covid-19

By

Published : Aug 2, 2020, 5:19 PM IST

உலகளவில் கரோனா வைரஸ் தொற்றால் அதிகமாக பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில், அமெரிக்கா முதலிடத்திலும், பிரேசில், இந்தியா ஆகியவை அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன.

இந்நிலையில், தென் ஆப்பிரிக்காவில் நேற்று (ஆகஸ்ட் 01) ஒரே நாளில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதன்மூலம் அந்நாட்டில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஐந்து லட்சத்தை தாண்டியுள்ளது.

மேலும், உலகளவில் இத்தொற்று நோயால் இதுவரை ஒரு கோடியே 80 லட்சத்து 25 ஆயிரத்து 877 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல், 6 லட்சத்து 88 ஆயிரத்து 962 பேர் உயிரிழந்துள்ளனர்.

Global tracker

இதையும் படிங்க:அதிகரிக்கும் அமேசான் தீ விபத்துகள்!

ABOUT THE AUTHOR

...view details