தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

புதுச்சேரியில் கரோனா பாதிப்பு 104ஆக உயர்வு - சுகாதாரத்துறை இயக்குநர் தகவல் - புதுச்சேரியில் கரோனா தொற்று 104 ஆக உயர்வு

புதுச்சேரி: கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 104ஆக உயர்ந்துள்ளது என சுகாதாரத்துறை இயக்குநர் மோகன் குமார் தெரிவித்துள்ளார்.

சுகாதாரத்துறை இயக்குனர் மோகன் குமார்
சுகாதாரத்துறை இயக்குனர் மோகன் குமார்

By

Published : Jun 5, 2020, 6:46 PM IST

இது தொடர்பாக புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது பேசிய அவர், "புதுச்சேரியில் நேற்று (ஜூன் 4) வரை 99 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டனர். 62 பேர் கதிர்காமம் அரசு மருத்துவமனை, ஜிப்மர் மருத்துவமனை மற்றும் பிற மாநிலங்களில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதுவரை 36 நோயாளிகள் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இந்த நிலையில் மேலும் 5 பேருக்கு கரோனா நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் இன்று மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 104ஆக உயர்ந்துள்ளது. கோரிமேடு காவலர் குடியிருப்பு, பாகூர், சோலை நகர் பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கு நோய் உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்". இவ்வாறு அவர் தெரிவித்தார்.

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details