தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஆய்வக கசிவுகளுக்கு பின்னால் சில உண்மைகள் இருக்கலாம்! - Trump

ஹைதராபாத்: உலகை உலுக்கும் கரோனா வைரஸ், ஆய்வகத்திலிருந்து கசிந்ததா? இதற்கு முன்னர் உலகம் சந்தித்த வைரஸ் கசிவுகள் நிகழ்வுகள் குறித்து பார்க்கலாம்.

Corona Lab Leak  கரோனா வைரஸ், கோவிட்-19, வைரஸ் கசிவு, ஆய்வக உண்மைகள், சீனா, டொனால்ட் ட்ரம்ப், ஆந்த்ராக்ஸ், வைராலஜி  China released virus in lab ‘mistake’  Trump
Corona Lab Leak கரோனா வைரஸ், கோவிட்-19, வைரஸ் கசிவு, ஆய்வக உண்மைகள், சீனா, டொனால்ட் ட்ரம்ப், ஆந்த்ராக்ஸ், வைராலஜி China released virus in lab ‘mistake’ Trump

By

Published : May 7, 2020, 1:57 PM IST

புதிய வகை கரோனா வைரஸ் சீனாவின் ஆய்வகம் ஒன்றில் தயாரிக்கப்பட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் குற்றம் சாட்டினார். பல நாடுகளும் இதே சந்தேகத்தை வெளிப்படுத்தியுள்ளன. இதுபோன்ற குற்றச்சாட்டுகளில் ஏதேனும் உண்மை இருக்கிறதா? ஆய்வகத்திலிருந்து தப்பித்த வைரஸ் தொற்றுநோயாக மாற முடியுமா? கடந்த காலங்களில் சீனாவில் இதுபோன்ற நிகழ்வுகள் எதுவும் நிகழ்ந்துள்ளதா?
வைரஸ்கள் பற்றிய ஆராய்ச்சி மனித குலம் நீண்ட காலம் உயிர்பிழைத்திருப்பதற்கு மிக முக்கியமாகதாக உள்ளது. எதிர்காலத்தில் வைரஸ்களால் ஏற்படும் இறப்பைத் தடுக்க விஞ்ஞானிகள் அவ்வப்போது வைரஸ்களின் மரபனு குறித்து படிப்பது அவசியமாகிறது. சில நேரங்களில், விஞ்ஞானிகளே மரபணு கட்டமைப்பை மாற்றி வைரஸ்களை ஆபத்தானதாக மாற்றிவிடுகிறார்கள்.

இதுபோன்ற சோதனைகளைச் செய்ய உலகம் முழுவதும் வைராலஜி ஆய்வகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆய்வகங்கள் அவற்றின் உயிரியல் பாதுகாப்பு நிலைகளின் அடிப்படையில் தர வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. இந்த ஆய்வகக் கழிவுகளை வழக்கமான கழிவுகளுடன் வெளியேற்ற முடியாது. ஆய்வகங்களில் குளிக்கப் பயன்படும் நீர் கூட ரசாயன ஆய்வுக்கு உட்படுகிறது.

வைரஸ்கள் மனித உடலுக்குள் நுழைய அனைத்து வழிகளையும் பயன்படுத்துவதால், வைராலஜி ஆய்வகங்கள் உயர் பாதுகாப்புடன் பாதுகாக்கப்பட வேண்டும். கரோனா வைரஸ் சர்ச்சைக்குள்ளாகியுள்ள, வூகான் பகுதியில் உள்ள பி.4 (P4) ஆய்வகமும் இதுபோன்ற உயிர் பாதுகாப்பு ஆய்வகம் ஆகும். இந்த ஆய்வகத்திலிருந்தான் வைரஸ் பரவியிருக்கலாம் என்ற சந்தேகம் எழுகிறது.

ஏனெனில் இதுபோன்று கடந்த காலங்களிலும் நடந்துள்ளது. 1972 ஆம் ஆண்டில், லண்டன் சுகாதாரம் மற்றும் வெப்ப மருத்துவ ஆய்வக பள்ளியில் (ஸ்கூல் ஆஃப் ஹைஜீன் அண்ட் டிராபிகல் மெடிசின்) பணிபுரியும் ஒரு பெண் ஒரு முட்டை ஓடுகளில் ஒரு பரிசோதனையை மேற்கொண்டார். அப்போது அவர் பெரியம்மை வைரஸை உருவாக்கினார்.

எந்தவொரு பாதுகாப்பு நடவடிக்கையும் கடைபிடிக்கப்படாததால் அவரும் வைரசால் பாதிக்கப்பட்டார். அவர் மருத்துவமனையில் தனிமைபடுத்தப்பட்ட வார்டில் சிகிச்சை பெற்ற போது, செவிலியர் ஒருவருக்கும் மேலும் இரண்டு நோயாளிகளுக்கும் இந்த வைரஸ் பரவியது. பெரியம்மை வைரஸ் 1978 இல் பக்கிங்ஹாம் மருத்துவப் பள்ளியில் இருந்து தப்பியது.
அந்தப் பள்ளியில் பணிபுரியும் மருத்துவ புகைப்படக் கலைஞரான ஜேனட் பார்க்கர் என்பவருக்கு அவரது தோல் முழுவதும் புண்கள் ஏற்பட்டன. ஆரம்பத்தில், இது தட்டம்மை என்று மருத்துவர்கள் சந்தேகித்தனர். ஆனால் நோயின் தீவிரம் அதிகரித்ததால், அவர்கள் சோதனைகளை மேற்கொண்டு அதை பெரியம்மை என்று கண்டறிந்தனர். சில நாட்களில் அவர் இறந்துவிட்டார்.

ஜேனட்டிடம் இருந்து அவரது தாய்க்கும் வைரஸ் பரவியிருந்தாலும், அவர் உயிர் பிழைத்தார். ஆராய்ச்சியாளர்களின் அலட்சியம் காரணமான இந்த வைரஸ் ஆய்வகத்தின் வென்டிலேட்டர்கள் மூலமும் வெளியேறியது தெரியவந்தது. அதன் பின்னர் 300 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர். 2007 ஆம் ஆண்டில், இங்கிலாந்தின் பிர்பிரைட்டுக்கு அருகிலுள்ள ஆய்வகத்தில் ஏற்பட்ட தவறுகளால் ஆந்த்ராக்ஸ் கசிவு ஏற்பட்டது.

இந்த வைரஸ் 4 கிலோ மீட்டர் சுற்றளவில் பரவியது. இந்த வைரஸின் மரபணுவை ஆய்வு செய்த விஞ்ஞானிகள் 1967 ஆம் ஆண்டில் தோன்றிய அதே வகை வைரஸ் என்று அடையாளம் காட்டினர். பிர்பிரைட்டில் ஒரு ஆந்த்ராக்ஸ் தடுப்பூசி மையம் உள்ளது. அந்த இடத்திற்கு அருகில் கட்டுமானப் பணிகளுக்குப் பயன்படுத்தப்பட்ட லாரிகள் தற்செயலாக ஆந்த்ராக்ஸ் வைரஸ் அடங்கிய சேற்றைக் கொண்டு சென்றதில் இந்த வைரஸ் விலங்குகளிடையே பரவுவதற்கு வழிவகுத்தன.
1930 முதல் 1970 வரையிலான காலங்களில் அமெரிக்காவில் கொசுக்களால் பரவும் வெனிசுலா எக்வைன் என்செபாலிடிஸ் (VEE) எனப்படும் வைரஸ் நோய் பரவலாக இருந்தது. இது ஒரு ஜூனோடிக் வைரஸ் (விலங்குகளின் வழி தோன்றும் வைரஸ்) என்பதால், VEE தடுப்பூசி 1938 இல் உருவாக்கப்பட்டது. பின்னர் இது விலங்குகளுக்கு பயன்படுத்தப்பட்டது.
உண்மை யாதெனில், சில நேரடி தடுப்பூசி சிகிச்சைகள் ஓரளவு செயலிழந்த வைரஸ்களில் மட்டுமே செயல்பட்டன. இதன் விளைவாக, இந்த நோய் 1970ஆம் ஆண்டு வரை பல முறை தோன்றியது. இதன் பிழை பின்னர்தான கண்டறியப்பட்டது. அதன்பின் வைரஸ் பரவல் சில காலம் நின்றுவிட்டது. இருப்பினும், 1995ஆம் ஆண்டு இந்த வைரஸ் மீண்டும் வெனிசுலாவில் தோன்றியது. இந்தமுறை இது மனிதர்களை தாக்கியது.
அதன் மரபணு 1963ஆம் ஆண்டில் கண்டறியப்பட்டதை ஒத்திருந்தது. இது ஒரு தடுப்பூசி தயாரிப்பதில் பயன்படுத்தப்படாததால், இந்த வைரஸ் முழுமையாக கவனிக்கப்படாமல் ஒரு ஆய்வகத்தில் இருந்து தப்பித்துவிட்டது என்று முடிவு செய்யப்பட்டது.

வைராலஜி ஆராய்ச்சியின்போது வைரஸ்கள் தற்செயலாக பரவக்கூடும். மனித பிழைகள், மென்பொருள் செயலிழப்பு, பாதுகாப்பு சிக்கல்கள் மற்றும் உபகரணங்கள் செயலிழப்பு போன்றவற்றால் வைரஸ்கள் ஆய்வகங்களில் இருந்து தப்பிக்கலாம்.

2005ஆம் ஆண்டு முதல் 2012ஆம் ஆண்டு வரை இதுபோன்ற பல ஆய்வக கசிவுகள் அமெரிக்க சி.டி.சி.யின் (நோய் கட்டுப்பாட்டு மையங்கள்) கவனத்திற்கு கொண்டு வரப்பட்டன. பாதுகாப்பு உபகரணங்களில் ஏற்படும் குறைபாடுகளால் விஞ்ஞானிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம். ரசாயன குளியல் கருவிகள் மற்றும் குளியல் குழாய்ககளில் கிருமி நீக்கம் செய்வது சில நேரங்களில் செயலிழக்கச் செய்யும்.

2015-17 ஆம் ஆண்டில் இதுபோன்ற 40 சம்பவங்கள் நடந்தன. 2014ம் ஆண்டு அமெரிக்க உணவு மற்றும் மருத்துவ நிர்வாக அலுவலகத்தை (USFDA Office) பெதஸ்தாவிலிருந்து வைட் ஓக்கிற்கு மாற்றும் முயற்சிகளின் போது, பெரியம்மை வைரஸ் அடங்கிய ஒரு பெட்டி மோசமாக கையாளப்பட்டது.

இதில் நல்வாய்ப்பாக, யாரும் பாதிக்கப்படவில்லை. 2008 ஆம் ஆண்டில், அமெரிக்க ஆய்வகம் ஒன்றில் கிருமி நீக்கம் செய்யும் கருவியின் செயலிழப்பு காரணமாக ஊழியர் ஒருவர் அறியப்படாத வைரஸ் தொற்று காரணமாக இறந்தார். 2009 ஆம் ஆண்டில், பறவை காய்ச்சல் வைரஸ் குறித்த ஆய்வுப்பிரிவில் பணிபுரியும் ஆராய்ச்சியாளர்கள், ஆய்வகத்திலிருந்து வெளியேறுவதற்கு முன்பு, அவர்கள் தங்கள் தனிப்பட்ட பாதுகாப்பு உபகரண கருவிகளை அணிந்து ரசாயன குளியல் எடுக்க கட்டாயப்படுத்தப்பட்டனர். ஆனால் ரசாயன குளியல் கருவி வேலை செய்யாததால் ஆராய்ச்சியாளர்களில் ஒருவர் இந்த விதியை மீறிவிட்டார். அப்போது வைரஸ் பரவல் ஏற்பட்டது. ஆனால் நல்வாய்ப்பாக ஆய்வக பணியாளர்கள் அதனை கண்டறிந்து, வைரஸ் கசிவை தவிர்த்தனர்.

கரோனா வைரஸ்

தற்போது புதிய (நாவல்) கரோனா வைரஸ் அமெரிக்காவில் கொடிய விகிதத்தில் பரவி வருவதால், சி.டி.சி பெரிய அளவில் சோதனை கருவிகளை தயாரிக்க முடிவு செய்தது. அட்லாண்டா தலைமையகத்தில் உற்பத்தி பிரிவு செயற்கை கரோனா வைரஸ் பரிசோதனை பிரிவிற்கு அருகருகில் இருந்தது. செயல்பாட்டின்போது வைரஸ் சோதனைக் கருவி ஒன்றில் இருப்பது கண்டறியப்பட்டது. இதன் விளைவாக, காய்ச்சி வடிகட்டிய நீர் சோதிக்கப்பட்டாலும் கூட கருவிகள் நேர்மறையானவை என்று காட்டின. கருவிகள் பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. பிழை கண்டறியப்பட்டு சரிசெய்யப்பட்ட நேரத்தில் அது மிகவும் தாமதமாகிவிட்டது. சார்ஸ், கரேனா வைரஸ்-1 (SARS-CoV-1) அகியவை ஆய்வகங்களிலிருந்து பல முறை கசிந்துள்ளது. இதன் காரணமாக பல உயிரிழப்புகளும், சவால்களும் ஏற்பட்டுள்ளன. சீனாவில் மட்டும் இதுபோன்ற நான்கு ஆய்வக கசிவுகள் நிகழ்ந்துள்ளன. 2002ஆம் ஆண்டில் மிக முக்கியமான நோய் பரவலான சார்ஸ், சுவாசப் பிரச்னை உள்ளிட்டவைகளை ஏற்படுத்தியது.

இதற்கிடையில் 2003ஆம் ஆண்டு சிங்கப்பூர் மாணவர் ஒருவருக்கு சார்ஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. நல்வாய்ப்பாக இந்த நோய், யாருக்கும் பரவவில்லை. இதுமட்டுமின்றி கடந்த காலங்களில் சார்ஸ் நோயினால் இயற்கையாக யாரும் பாதிக்கப்படவில்லை. டிசம்பர் 2003ஆம் ஆண்டில் சார்ஸ் கரோனா வைரஸ்1 (SARS-CoV-1) மாதிரிகள் மற்றும் அதன் செயல்பாடுகளை கையாள்வதற்கான உயிர் பாதுகாப்பு வழிகாட்டுதல்களை உலக சுகாதார அமைப்பு மாற்றியுள்ளது.
2003ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், தைவானின் தைபேயில் ஒரு ஆராய்ச்சியாளர் சார்ஸ் (SARS) நோயால் பாதிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டது. நோய் கண்டறியப்படுவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு, அவர் தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள் பயன்படுத்தாமல் உயிர் கழிவுகளை அகற்றினார். இதில் அவருக்கு பாதிப்பு ஏற்பட்டது.

இந்த விவகாரத்தில் துரிதமாக செயல்பட்ட சீனா, ஆராய்ச்சியாளருடன் தொடர்பிலிருந்த 70 பேரையும் தனிமைப்படுத்தியது. 2004ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 22 மற்றும் 29ஆம் தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில், சீனாவின் தேசிய வைராலஜி நிறுவனத்தில் இரண்டு மாணவர்கள் சார்ஸ் வைரஸால் பாதிக்கப்பட்டனர். இதற்கிடையில் தொற்று ஏழு மாணவர்களுக்கு பரவியது. இந்த விவகாரத்துக்கு பிறகும் சீனாவில் மேலும் மூன்று முறை வைரஸ் கசிவு ஏற்பட்டுள்ளது. இதனை இங்கிலாந்தின் பத்திரிகை ஒன்று உறுதிப்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: கோவிட்-19 மருந்து: மரபணு ஆராய்ச்சியில் முதல் வெற்றி...!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details