கரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், கர்நாடாக மாநிலத்திலுள்ள குடகு பகுதியில் கரோனா பாதித்த நோயாளிக்கு 300 நபர்களுடன் தொடர்பில் இருந்திருக்கலாம் என்ற தகவல் வெளியானதை தொடர்ந்து அப்பகுதி முழுவதையும் காவல் துறையினரும் மருத்துவக் குழுவினரும் கண்காணிப்பு வட்டத்துக்குள் கொண்டு வந்துள்ளனர்.
கர்நாடகாவில் கரோனா பாதித்த நோயாளியுடன் 300 நபர்களுக்கு தொடர்பு! - Annies Kanmani Joy
கோடகு: கரோனா பாதித்த நோயாளி 300 நபர்களுடன் இருந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக துணை ஆணையர் அன்னிஸ் கண்மனி ஜாய் (Annies Kanmani Joy) தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து துணை ஆணையர் அன்னிஸ் கண்மனி ஜாய் கூறுகையில், "அந்த கரோனா பாதித்த நபருடன் தொடர்பிலிருந்த நபர்கள் அனைவரின் விவரங்களையும் எடுத்துள்ளோம். அவரது வீட்டைச் சுற்றியுள்ள 75 வீடுகளும் கண்காணிப்பு வட்டத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. மக்கள் அனைவரும் வீட்டிலிருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பி.யூ.சி. தேர்வு ஏழுதும் மாணவர்கள் தனி வண்டியில் அழைத்துச் செல்லப்படுகிறார்கள். அவர்கள் அனைவரும் கல்வி அலுவர் முன்பு தனிமைப்படுத்தப்பட்டு எழுத வைக்கப்படுகிறார்கள்" என்றார்.
இதையும் படிங்க:'என் குடும்பத்துல இருக்குற மத்தவங்களுக்கு பரவக் கூடாது'; விருந்தினர் மாளிகையில் கரோனா பாதிக்கப்பட்ட மகனை மறைத்து வைத்த தாய்!