தமிழ்நாடு

tamil nadu

By

Published : Mar 15, 2020, 2:30 AM IST

ETV Bharat / bharat

கொரோனாவிற்கு நிதி தேவை -புதுவை அமைச்சர் வேண்டுகொள்!

புதுச்சேரி: கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், உபகரணங்கள் வாங்கவும் 11 கோடி ரூபாய் நிதி தேவை என புதுவை அமைச்சர் கமலக்கண்ணன் தெரிவித்துள்ளார்.

கொரோனாவிற்கு நிதி தேவை -புதுவை அமைச்சர் வேண்டுகொள்!
கொரோனாவிற்கு நிதி தேவை -புதுவை அமைச்சர் வேண்டுகொள்!

கொரோனா வைரஸ் தொடர்பாக காரைக்கால் மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டுள்ள தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விளக்க புதுச்சேரி வேளாண் மற்றும் கல்வி அமைச்சர் கமலக்கணன் அம்மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அதில் “காரைக்கால் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவக்கல்லூரி ஆகியவை கொரோனா சிறப்பு சிகிச்சை மையங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதுதவிர திருநள்ளாறு, திருவேட்டக்குடி, அம்பகரத்தூர், திருப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள திருமண மண்டபங்கள், சமுதாயக் கூடங்கள் ஆகியவை கொரோனா சிகிச்சைக்கு தயார்படுத்தப்பட்டுள்ளன.

கொரோனாவிற்கு நிதி தேவை -புதுவை அமைச்சர் வேண்டுகொள்!

புதுச்சேரி மாநிலத்தில் எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகளை நடத்த வேண்டாம் என பள்ளி நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம்” எனக் கூறினார்.

மேலும், காரைக்காலில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், உபகரணங்கள் வாங்கவும் 11 கோடி ரூபாய் நிதி தேவைப்படுவதாகவும், இதற்காக புதுச்சேரி அரசுக்கு காரைக்கால் மாவட்ட நிர்வாகம் கோப்பு அனுப்பியுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க...நாகர்கோவில் டூ நாசா: கல்லூரி மாணவிக்கு குவியும் பாராட்டு

ABOUT THE AUTHOR

...view details