புதுச்சேரியில் ஒரே நாளில் 554 பேருக்கு கரோனா - புதுச்சேரி கரோனா அப்டேட்
புதுச்சேரி: இன்று (ஆகஸ்ட் 20) ஒரே நாளில் 554 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ் இன்று (ஆகஸ்ட் 20) வெளியிட்டுள்ள காணொலி பதிவில் கூறியிருப்பதாவது, 'புதுச்சேரியில் இன்று (ஆகஸ்ட் 20) அதிகபட்சமாக 554 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் நோய்த்தொற்று பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 9 ஆயிரத்து 292ஆக உயர்ந்துள்ளது. சிகிச்சைப் பெற்று வந்த 8 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மாநிலத்தில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தோர் எண்ணிக்கை 137ஆக உயர்ந்துள்ளது.
தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருபவர்கள், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டோர் எண்ணிக்கை 3 ஆயிரத்து 521 பேர். மருத்துவமனையிலிருந்து 5 ஆயிரத்து 634 நபர்கள் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர்' என சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ் தெரிவித்துள்ளார்.