இது தொடர்பாக அவர் வெளியிட்ட வீடியோ பதிவில், "புதுச்சேரியில் புதிதாக 481 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுதான் புதுச்சேரியில் அதிகபட்சமாகும். புதிதாக ஐந்து பேர் தொற்று காரணமாக இறந்தனர். இதுவரை கரோனாவால் 96 பேர் உயிரிழந்தனர். புதுச்சேரி அரசு மருத்துவமனைகளில், 2 ஆயிரத்து 616 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
புதுச்சேரியில் மொத்தம் 6ஆயிரத்து 381 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 3ஆயிரத்து 669பேர் குணமடைந்துள்ளனர். இன்னும், 621 பேருக்கு சோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது. புதுவையில் கடந்த நான்கு நாள்களில் கரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.