கர்நாடகாவில் கொரோனா இருப்பதால் மால்கள் மற்றும் தியேட்டர்கள் ஒரு வாரம் மூடப்படுகின்றன. இதற்கு பொதுமக்கள் ஒத்துழைக்குமாறு மாநில அரசு கேட்டுக்கொண்டது. மேலும், ஒரு வாரத்திற்கு மால், தியேட்டர்கள், கூட்டங்கள், பொது மாநாடுகள், பப், கிளப்பும், திருமணங்கள் நடைபெறக் கூடாது எனவும் அம்மாநில முதலமைச்சர் எடியூரப்பா உத்தரவிட்டுள்ளார்.
கொரோனா அச்சம்: கர்நாடகாவில் மால்கள் மற்றும் திரையரங்குகள் மூடல் - கர்நாடகாவில் கொரோனா அச்சம்
கர்நாடகா: கொரோனா அச்சம் காரணமாக, ஒரு வாரம் கர்நாடகாவில் மால்கள் மற்றும் திரையரங்குகள் மூடப்படுகின்றன.
கொரோனா
மேலும், திட்டமிட்டபடியே, முன்பே தேர்வுகள் நடத்தப்படும். அதனைத் தொடர்ந்து விளையாட்டு பயிற்சிகளும் ஒரு வாரம் ரத்து செய்யப்பட்டது. இதனால், ஐடி ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர்.
இதையும் படிங்க:'கொரோனா எதிரொலி' - வெளிநாட்டினர் கோயிலுக்கு வருவதைத் தவிர்க்க அறிவுறுத்தல்