தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jul 14, 2020, 11:38 PM IST

ETV Bharat / bharat

நாள் ஒன்றுக்கு 3 ஆயிரம் பேருக்கு கரோனா பரிசோதனை - மல்லாடி கிருஷ்ணாராவ்

புதுச்சேரி: தினமும் மூவாயிரம் பேருக்கு கரோனா பரிசோதனை செய்யும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக, சுகாதாரத்துறை அமைச்சர் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணராவ்
கிருஷ்ணராவ்

புதுச்சேரியில் இன்று ( ஜூலை 14) சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடிகிருஷ்ணராவ் செய்தியாளர்களிடம் கூறியதாவது," புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனம் ஆகிய பகுதிகளில் இன்று (ஜூலை 14) புதிதாக 63 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதில் புதுச்சேரியில் 51பேரும், காரைக்கால் பகுதியில் 2 பேரும், ஏனாம் பகுதியில் 10 ஆக மொத்தம் 63 பேர் இன்று பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரை புதுச்சேரியில் மொத்தம் 1,531பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது 829 பேர் குணமடைந்து வீட்டுக்குச் சென்றுள்ளனர்.

புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனம் ஆகிய பகுதிகளில் மொத்தம் 684 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர். இதுவரை புதுச்சேரியில் மட்டும் 18 பேர் இறந்து ள்ளனர். நேற்று ( ஜூலை 13) காலை 10 மணியிலிருந்து இன்று( ஜூலை 14) காலை 10 மணி வரை 637 பேருக்கு பரிசோதனை செயப்பட்டுள்ளது.

பொது மக்கள் விழிப்போடு இருக்க வேண்டும். அனைவரும் முகக்கவசத்துடனும், தகுந்த இடைவெளியுடன் இருக்க வேண்டும். இன்னும் 15 நாட்களில் நாளொன்றுக்கு 3 ஆயிரம் பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது" என்று கூறினார்.

ABOUT THE AUTHOR

...view details