தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

புதுச்சேரியில் ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும், வெளிமாநில மக்களுக்கு அனுமதி இல்லை - முதலமைச்சர் நாராயணசாமி - Corona Curfew is relaxed in Puducherry CM Narayanasamy

புதுச்சேரி: ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும், வெளிமாநில மக்களுக்கு அனுமதி இல்லை என முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி செய்தியாளர்ச் சந்திப்பு
புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி செய்தியாளர்ச் சந்திப்பு

By

Published : Apr 30, 2020, 8:32 PM IST

புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி சட்டப்பேரவை வளாகத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “புதுச்சேரியில் தற்போது வரை மூன்று பேர் மட்டுமே கரோனா நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் நேற்று புதிதாக 69 பேருக்கு மாதிரிகள் எடுக்கப்பட்டு நோய்த்தொற்று பரிசோதனை செய்யப்பட்டதில் யாருக்கும் இல்லை என்று வந்துள்ளது. புதுச்சேரியின் பிராந்தியங்களான காரைக்கால் மாஹே, ஏனாம் ஆகிய பகுதிகளில் தொற்று இல்லாத பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன” எனக் கூறினார்.

மேலும், “புதுச்சேரி எல்லைப்பகுதியான கோரிமேடு பகுதியில் காலை ஆய்வு செய்த சென்றபோது, தமிழ்நாடு பகுதியிலிருந்து பல மக்கள் ஜிப்மர் மருத்துவமனையில் மருத்துவம் பார்க்க வருகின்றனர். அதனால் மருத்துவ பரிசோதனைக்கு வருபவர்களை தவிர மற்றவர்களை புதுச்சேரி எல்லைக்குள் அனுமதிக்கக் கூடாது.

புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி செய்தியாளர் சந்திப்பு

இதனையடுத்து மே 3ஆம் தேதி புதுச்சேரி அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் ஊரடங்கு தொடர்பாக மத்திய அரசும் அண்டை மாநிலங்களும் என்ன முடிவெடுக்கின்றன என்பதை ஆய்வு செய்து புதுச்சேரியில் ஊரடங்கு படிப்படியாக தளர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க...கோயம்பேடு சந்தையில் வேலை பார்த்தவருக்கு கரோனா!

ABOUT THE AUTHOR

...view details