இது குறித்து அவர் வெளியிட்டுள்ள காணொலி பதிவில், "புதுச்சேரி மாநிலத்தில் தற்போது 39 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.
மாநிலத்தில் இதுவரை ஆறாயிரத்து 677 பேருக்கு உமிழ்நீர் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், ஆறாயிரத்து 593 பேருக்கு நோய்த்தொற்று இல்லை எனத் தெரியவந்துள்ளது.
புதுச்சேரியில் நோய்த்தொற்று அதிகரித்துவரும் நிலையில், இதனைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக மாநிலம் ஆறு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, இதனை கண்காணிக்க 27 குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.