புதுச்சேரி மணவெளி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும், அரசு கொறடாவுமான அனந்தராமன் கடந்த சில நாள்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், அவருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி அரசு கொறடா கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதி! - அரசு கொறடா அனந்தராமன் கரோனா
புதுச்சேரி அரசு கொறடா அனந்தராமனுக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Puducherry Government Korata Anandaraman
அதையடுத்து சிகிச்சைக்காக அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே புதுச்சேரியில் அமைச்சர்கள் கமலக்கண்ணன், கந்தசாமி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஜெயபாலன், சிவா, பாஸ்கர் ஆகியோர் கரோனா பாதிக்கப்பட்டு, குணமாகி வீடு திரும்பினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:திருச்சியில் புதிதாக 80 பேருக்கு கரோனா தொற்று உறுதி