தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

திருநள்ளாறு கோயிலுக்குள் செல்ல கரோனா நெகடிவ் சான்றிதழ் அவசியம்: பயணிகள் விடுதி உரிமையாளர்கள் எதிர்ப்பு! - புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி

புதுச்சேரி: திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் ஆலயத்தில் நடைபெறும் சனிப்பெயர்ச்சி விழாவிற்கு, பக்தர்கள் 48 மணி நேரத்திற்கு முன்பு கரோனா பரிசோதனை செய்த நெகடிவ் சான்று பெறவேண்டும் என்ற முடிவிற்கு திருநள்ளாறு பயணிகள் விடுதி உரிமையாளர்கள் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

கோயிலுக்குள் செல்ல கரோனா சான்றிதழ் அவசியம்
கோயிலுக்குள் செல்ல கரோனா சான்றிதழ் அவசியம்

By

Published : Dec 25, 2020, 8:45 PM IST

புதுச்சேரி மாநிலம் காரைக்காலை அடுத்த திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் ஆலயத்தில் சனீஸ்வர பகவான் சன்னதியில் வரும் டிச. 27ஆம் தேதி நடைபெறும் சனிப்பெயர்ச்சி விழாவை கரோனா பரவல் தடுப்பு பாதுகாப்பு முன்னெச்சரிக்கையுடன் நடத்த சென்னை உயர் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

அதனையடுத்து, பக்தர்களை அனுமதிப்பது குறித்து துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தலைமையில் அறநிலையத் துறை செயலர் சுந்தரேசன், காரைக்கால் ஆட்சியர் அர்ஜுன் சர்மா ரெட்டி உள்ளிட்ட அலுவலர்கள் கலந்தாலோசித்து முடிவுசெய்ய உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது.

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தலைமையில் ஐந்து பேர் குழு ஆலோசனை நடத்தியது. அதில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி கூறுகையில், “உயர் நீதிமன்ற அறிவுறுத்தல்படி, முன்னரே தீர்மானித்த பாதுகாப்பு விதிமுறைகளில் சில மாற்றங்கள் செய்து, கூடுதலாக கவனம் செலுத்தப்பட்டு சிறப்பு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை ஏற்படுத்தப்படும்.

இதனால், நடைபெறவுள்ள விழாவில் குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். கோயிலில் தரிசனம் செய்யும் அனைவரும் 48 மணி நேரத்திற்கு முன்பு கரோனா பரிசோதனை செய்த சான்றுதல் பெறவேண்டும்” எனத் தெரிவித்தார்.

எதிர்ப்பு தெரிவிக்கும் விடுதி உரிமையாளர்கள்:

இந்நிலையில் இன்று (டிச.25) திருநள்ளாறு பயணிகள் விடுதி உரிமையாளர்கள் சங்கம் மற்றும் வர்த்தகர்கள் சங்கம் சார்பில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த லெனின் கூறுகையில், “கூட்டத்தில் கோயிலில் தரிசனம் செய்யும் அனைவரும் 48 மணி நேரத்திற்கு முன்பு கரோனா பரிசோதனை செய்த நெகடிவ் சான்றுதல் பெறவேண்டும் என்னும் உத்தரவால் பக்தர்களின் வருகை குறைந்து, வியாபாரத்தில் பாதிப்பு ஏற்படும்.

கோயிலுக்குள் செல்ல கரோனா சான்றிதழ் அவசியம்

இதனை நம்பி பல லட்சம் கடன் பெற்ற தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். கரோனா பரிசோதனைக்கு இன்று (டிச.25) இரவுக்குள் மாவட்ட நிர்வாகம் விலக்கு அளிக்க வேண்டும், இல்லையெனில் நாளை (டிச.26) முதல் தொடர்ந்து கடைகள், விடுதிகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபடுவோம்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:கோயில் திருவிழாவிற்கு அனுமதி கோரி ஆர்ப்பாட்டம்

ABOUT THE AUTHOR

...view details