இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் காணொலியில், ”மக்கள் தகுந்த இடைவெளியைக் கடைப்பிடித்தல், முகக் கவசம், கிருமி நாசினி பயன்படுத்துதல் அவசியம். சிலரின் பொறுப்பற்ற நடவடிக்கைகளால் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகரிக்கின்றனர். இந்த நிலை தொடர்ந்தால் ஜூலை மாதத்தில் புதுச்சேரியில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தொடும்.
யாருக்கு வேண்டுமானாலும் தொற்று ஏற்படும் நிலை உருவாக வாய்ப்புள்ளதால், ஆரோக்கிய சேது செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள். முதலில் உங்களைக் காப்பாற்றிக் கொள்வது அவசியம். புதுச்சேரி அரசு விதிக்கும் விதிமுறைகளை கண்டிப்பாகப் பின்பற்றுங்கள். தமிழ்நாட்டில் கட்டுப்பாடுகளை தளர்த்தும்போது புதுச்சேரியில் மேலும் வைரஸ் பாதிப்புகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது.