புதுச்சேரியில் நாள்தோறும் 500க்கும் மேற்பட்டோர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது குணமடைந்து வீடு திரும்புவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
புதுவையில் குறையத் தொடங்கும் கரோனா பாதிப்பு! - புதுச்சேரி மாநில செய்திகள்
புதுச்சேரி: கரோனா தொற்று அதிகளவில் பரவி வந்த நிலையில், தற்போது தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.
இதுகுறித்து சுகாதாரத்துறை இயக்குநர் மோகன் குமார் இன்று (ஆக .31)வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், " புதுச்சேரியில் இன்று புதிதாக 291 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 14 ஆயிரத்து 411 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சிகிச்சை பெற்று வந்த 366 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஏழு பேர் சிகிச்சை பலனின்றி இன்றுஉயிரிழந்துள்ளனர். இதனால், கரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 228ஆக உயர்ந்துள்ளது. புதுச்சேரியில் தற்போது பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது" எனக் குறிப்பிட்டுள்ளார்.