புதுச்சேரியில் தினந்தோறும் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. அவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்
ஊழியருக்கு கரோனா பாதிப்பு: புதுச்சேரி தலைமை தபால் நிலையம் மூடல் - puducherry corona affect
புதுச்சேரி: தலைமை தபால் நிலையத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
ஊழியருக்கு கரோனா பாதிப்பு: புதுச்சேரி தலைமை தபால் நிலையம் மூடல்
இந்நிலையில் புதுச்சேரி மாநகர பகுதியில் உள்ள தலைமை தபால் நிலையத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கு கரோனா நோய் தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து புதுச்சேரியில் உள்ள தலைமை தபால் நிலையம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக இன்று ஒரு நாள் மட்டும் தலைமை தபால் நிலையம் மூடப்பட்டுள்ளது.
கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, தலைமை தபால் நிலையத்தில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது.