தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

“ஜனநாயகத்தின் முக்கிய தூண்கள் சிதைக்கப்படுகின்றன”- அபிஷேக் சிங்வி

ஹைதராபாத்: சர்வதேச ஜனநாயக தினத்தையொட்டி, காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற காணொலி கருத்தரங்கில் பேசிய மாநிலங்களவை உறுப்பினர் டாக்டர் அபிஷேக் சிங்வி, இந்திய ஜனநாயகத்தின் முக்கிய தூண்கள் சிதைக்கப்படுவதாகக் மத்திய அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.

v
இந்திய ஜனநாயகத்தின் முக்கிய தூண்கள் சிதைக்கப்படுகிறது-மாநிலங்களவை உறுப்பினர் டாக்டர் அபிஷேக் சிங்வி

By

Published : Sep 16, 2020, 5:20 PM IST

ஜனநாயக முறை குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக உலகம் முழுவதும் சர்வதேச ஜனநாயக தினம் செப்டம்பர் 15 அன்று அனுசரிக்கப்படுகிறது.

ஐக்கிய நாடுகள் பொதுச் சபை 2007 நவம்பரில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 15 அன்று 'சர்வதேச ஜனநாயக தினத்தை' கடைபிடிக்க முடிவு செய்தது.

சர்வதேச ஜனநாயக தினத்தையொட்டி, காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற காணொலி கருத்தரங்கில் (வெபினார்) பேசிய மாநிலங்களவை உறுப்பினரும், காங்கிரஸ் மூத்தத் தலைவருமான டாக்டர் அபிஷேக் சிங்வி, ஜனநாயகத்தின் பல்வேறு நிறுவன மற்றும் நிறுவன சாராத தூண்களையும், நாட்டை வடிவமைப்பதில் அவற்றின் முக்கிய பங்கையும் சுட்டிக்காட்டினார்.

சுமார் ஒரு மணி நேரம் நீடித்த கருத்தரங்கில் சிங்வி பேசுகையில், "பத்திரிகைகள் உணர்விலிருந்து பரபரப்பிற்கு, செய்திகளிலிருந்து அறிவிப்புக்கு, சமநிலையை தீவிரவாதத்திற்கு நகர்த்தி வருகின்றன. ஊடகங்கள் அரசியல் காரணிகளால் தங்களது நோக்கில் இருந்து திசை மாறி வீழ்ச்சி அடைந்துவருகின்றன”. எனத் தெரிவித்தார்.

மேலும், இந்திய ஜனநாயகத்தின் தூண்கள் சிதைக்கப்படுகின்றன என்றும் மத்திய அரசை குற்றஞ்சாட்டினார்.

ABOUT THE AUTHOR

...view details