தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தெலங்கானா என்கவுன்டர்: குற்றவாளிகளைச் சுட்டது தொடர்பான ஆதாரங்கள் சமர்ப்பிப்பு! - பெண் மருத்துவர் கொலை வழக்கு

ஐதராபாத் : பெண் கால்நடை மருத்துவர் கொலை வழக்கில் குற்றவாளிகள் சுட்டுக் கொல்லப்பட்ட நிகழ்வின் ஆதாரங்களை மனித உரிமைகள் ஆணையத்திடம் காவல் துறை சமர்ப்பித்துள்ளது.

Cops submit report to NHRC
vet doctor case acquits encounter

By

Published : Dec 11, 2019, 4:58 PM IST

ஹைதராபாத்தில் பெண் கால்நடை மருத்துவர் திஷா கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் நான்கு பேரும் காவல் துறையினர் நடத்திய என்கவுன்டரில் கடந்த வாரம் சுட்டுக் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தது.

அதன்படி ஹைதராபாத்துக்கு வந்துள்ள அந்த ஆணையத்தின் குழுவானது என்கவுன்டர் தொடர்பாக காவல் துறையினரிடம் விசாரணை நடத்திவருகிறது.

மேலும் என்கவுன்டர் சம்பவத்தின்போது காயமடைந்த இரண்டு காவல் துறையினரிடம் அக்குழுவினர் நேற்று விசாரணை நடத்தினர். இதில் குற்றவாளிகளின் தாக்குதலிலிருந்து தற்காத்துக் கொள்வதற்காகவே தாங்கள் அவர்களைச் சுட்டதாகக் காவலர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இவ்வழக்கு தொடர்பாக காவல் துறை தரப்பில் இதுவரை சேகரித்த ஆதாரங்களையும் அக்குழுவிடம் சமர்ப்பித்துள்ளனர்.

தெலங்கானா என்கவுண்டர்: பிரபலங்கள் கருத்து!

இதனிடையே பெண் மருத்துவர் கொலை வழக்கானது உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தேசிய மனித உரிமை ஆணைய குழுவினர் தங்களது விசாரணை அறிக்கையையும் காவல் துறையினர் வழங்கிய ஆதாரங்களையும் நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details