பாகிஸ்தான் நாட்டின் சிந்து மாகாணத்தில் காவல் துறை தலைவரை ராணுவத்தினர் கடத்தியதாகத் தகவல் வெளியானது. சுமார் நான்கு மணி நேரம் ராணுவத்தின் பிடியில் ஐஜி சிக்கிக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் காவல் துறையினருக்கும் ராணுவத்தினருக்கும் இடையில் கடும் மோதல் ஏற்பட்டது.
பாகிஸ்தானில் போலீஸ் - ராணுவத்தினரிடையே மோதல் : 10 காவலர்கள் உயிரிழப்பு! - சிந்து மாகாணம்
கராச்சி : சிந்து மாகாணத்தில் ராணுவத்தினருக்கும் காவல் துறையினருக்கும் இடையே நடைபெற்ற தாக்குதலில் 10 காவலர்கள் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
இந்த மோதலின்போது நிகழ்ந்த தீ வைப்பு சம்பவங்களில் சில காவலர்கள் இறந்துவிட்டதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், பாகிஸ்தான் நாட்டில் உள்நாட்டுப் போர் ஏற்பட்டுள்ளதா என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், காவல் துறைக்கும் ராணுவத்துக்கும் இடையே நடைபெற்ற தாக்குதலில் இதுவரை 10 காவலர்கள் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வத் தகவல் வெளியாகியுள்ளது. இரு தரப்பினருக்கும் இடையே நடைபெறும் இந்தத் தாக்குதல், மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.