பிரதமரின் வேண்டுகோளின்படி நேற்றைய தினம் மக்கள் ஊரடங்கு நாடு முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டது. இதற்குப் பெருவாரியான மக்களும் ஒத்துழைப்பு வழங்கினர். அப்போது, தேவையற்ற வகையில் வெளியில் சுற்றித்திரிந்த மூன்று பேரை காவலர் ஒருவர் தோப்புக் கரணம் போடவைத்துள்ளார். இந்தக் காணொலி தற்போது சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டுவருகிறது.
ஊரடங்கின்போது சுற்றித்திரிந்தவர்களைத் தோப்புக்கரணம் போடச்செய்த காவலர்! - ஊரடங்கின்போது சுற்றித்திரிந்தவர்களை தோப்புகரணம் போடச் செய்த போலீஸ்!
மும்பை: புனேவில் மக்கள் ஊரடங்கின்போது தேவையில்லாமல் வெளியில் சுற்றித்திரிந்த மூன்று பேரை காவலர் ஒருவர் தோப்புக்கரணம் போடச் செய்த காணொலி தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பகிரப்படுகிறது.
தேவையில்லாமல் வெளியில் சுற்றித்திரிந்தவர்களை தோப்புகரணம் போடச் செய்த போலீஸ்
இது குறித்து பேசிய காவலர், தேவையற்ற வகையில் சுற்றித்திரிந்தது உறுதிசெய்யப்பட்டதால் அவர்களைத் தோப்புக்கரணம் போடவைத்ததாகத் தெரிவித்துள்ளார். இதனிடையே கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை வழங்கும் மருத்துவர்கள், அத்தியாவசிய சேவைகளை வழங்கிவருபவர்களுக்கு நன்றி தெரிவிக்கும்வகையில் நேற்று மாலை ஐந்து மணிக்கு மக்கள் கரவொலி எழுப்பினர்.
இதையும் படிங்க:கரோனாவுக்கு எதிரான தொழில்நுட்ப போர்: பின்னணி என்ன?