இதுகுறித்து மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் தனது ட்விட்டரில், "மகராஷ்டிராவில் இன்று 145 ஷ்ராமிக் சிறப்பு ரயில்கள் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
நண்பகல் 3 மணியளவில், 50 ரயில்கள் புறப்பட்டிருக்க வேண்டும். ஆனால், குறைந்த பயணிகள் காரணமாக 13 ரயில்கள் மட்டுமே புறப்பட்டுச் சென்றுள்ளது. தயவுகூர்ந்து மகாராஷ்டிரா அரசு இதற்கு ஒத்துழைப்புத்தர வேண்டும். இல்லையேல் இந்த மொத்த திட்டமும் பாதிக்கப்படும்" எனத் தெரிவித்திருந்தார்.
முன்னதாக மகாராஷ்டிரா அரசு புலம்பெயர் தொழிலாளர்களை, அவர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்ப, நாள் ஒன்றுக்கு 80 சிறப்பு ரயில்களை கேட்டிருந்தது. ஆனால், மத்திய அரசு 30-40 ரயில்களை அனுப்புவதாக அம்மாநில அரசுக்குத் தெரிவித்திருந்தது.