தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஒப்பந்ததாரர் கொலை வழக்கு: விசாரணை தீவிரம் - contractor murder case

புதுச்சேரி: ஒப்பந்ததாரர் கொலை வழக்கில் ஐந்து பேரை கைது செய்துள்ள காவல்துறையினர், இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

ஒப்பந்ததாரர் கொலை வழக்கு: விசாரணை தீவிரம்
ஒப்பந்ததாரர் கொலை வழக்கு: விசாரணை தீவிரம்

By

Published : Oct 16, 2020, 2:57 PM IST

தருமபுரி பகுதியை சேர்ந்த தனியார் ஒப்பந்ததாரரான ஜீவா என்கிற இருசப்பன் கடந்தவாரம் அடையாளம் தெரியாத நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்து மேட்டுப்பாளையம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

கொலையான ஜீவாவிடம், அப்பகுதியை சேர்ந்த ஜயப்பன் பணம் கேட்டு சில நாள்களுக்கு முன்பு ஜீவாவை மிரட்டியதும், இதற்கு எதிர்வினையற்றியதும் விசாரணையில் தெரியவந்தது.

இதனால் ஐயப்பன் தூண்டுதலால் ஜீவா கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை முடுக்கி விடப்பட்டது. இதையடுத்து காந்தி திருநள்ளூரை சேர்ந்த ஜீவா, ஜோசப், ஆகாஷ் சசிகுமார் , வானரப் பேட்டையை சேர்ந்த முருகன் ஆகிய ஐந்து பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

மேலும் தருமபுரியை சேர்ந்த காங்கிரஸ் பிரமுகரின் தொழில் பகையால், கொலைக்கு தூண்டபட்டிருக்கலாம் இருக்கலாம் என்ற அடிப்படையிலும் காவல்துறையினர் விசாரித்துவருகின்றனர்.

கொலை செய்யப்பட்ட ஜீவாவின் உறவினர்கள் கொலையாளிகளை உடனடியாக கைது செய்யக் கோரியும் அப்பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details