சமீபகாலத்தில் பொறுப்பேற்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிகள் ஜனநாயகத்தை சீரழித்துவிட்டதாக மூத்த வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். நீதிமன்றத்திற்கு களங்கம் விளைவித்ததாகக் கூறி பூஷணின் ட்வீட் குறித்து உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. நீதிபதிகள் அருண் மிஸ்ரா, பி.ஆர். கவாய், கிருஷ்ண முராரி ஆகியோர் கொண்ட அமர்வு, பிரசாந்த் பூஷண் குற்றவாளி என ஆகஸ்ட் 14ஆம் தேதி தீர்ப்பளித்தது.
இத்தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனுவைத் தாக்கல்செய்ய பூஷண் திட்டமிட்டுள்ளார். நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், தண்டனை குறித்த விசாரணையை வேறொரு அமர்வுக்கு மாற்றக்கோரி உச்ச நீதிமன்றத்தில் பூஷண் மனு தாக்கல்செய்தார். நீதிபதிகள் அருண் மிஸ்ரா, பி.ஆர். கவாய், கிருஷ்ண முராரி ஆகியோர் கொண்ட அமர்வு, இந்த மனுவை தள்ளுபடி செய்துள்ளது.